பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 119 வெளியே வந்ததும் வராததுமாக நீ ஆற்றிட வேண் டிய பணி உன் எதிரே மலைபோல் உயர்ந்து நிற்கிறது! உன் தோளில் தோள் இணைத்து நானும் நமது உடன்பிறப்புக்களும் முடித்திட வேண்டிய அந்த ஜன நாயகப்பணிக்கு நேரமும் நாளும் குறித்தாகி விட்டது. போதிய நாட்கள் இல்லை. குறுகிய நேரம்தான் எனினும் நம் கடன் பணி செய்து கிடப்பதேயன்றோ? நீ பெற்றுள்ள தியாக முத்திரைகள்-விழுப்புண்கள் எதையும் எதிர்பார்த்துப் பெற்றவை அல்ல! நீ ஆனால் அவைகள் என்றென்றும் மதிக்கத் தகுந் தவை! இன்றில்லாவிட்டால் - - நாளை 1 நாளை தவறினால் மறுநாள் என்று நாட்கள் தள்ளிப் போடப் பட லாமே தவிர, புடம் போட்ட தங்கமாம் உனக்குப் பொருத்தமான புகழாரம் அணிவிக்கப்பட்டே தீரும்! அது இந்தக் கழகத்தின் மாண்பு! ஆம், நமது பாசறை யின் மரபு! எத்தனையோ நன்றி கெட்டவர்கள் நம்பிக் கைத் துரோகிகள், உதித்த வயிற்றைப் பிளந்தவர்கள், குடித்த மார்பை அறுத்தவர்கள் அவர்களையெல்லாம அடையாளம் தெரிந்துகொள்ளாமல் மேலே ஏற்றிவிடும் ஏணியாகவன்றோ எனது தோள்கள் இருந்திருக்கின்றன! தூய்மையின் வடிவே! தும்பைப்பூ உள்ளமே! உனக்கா எனது தோள் இடம் தராது என்று கருதுகிறாய்? -W நிச்சயம் இடம் தரும்! இப்போது நீயும் நானும் நமது உடன்பிறப்புத் தலைவர்களும், தளநாயகர்களும், செயல்வீரர்களும் ஈடுபடும் தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவது ஒன்றே குறிக்கோளாக இருந்திட வேண்டும். யார் வாயிலாக அந்த வெற்றியைப் பெறுவது? அதற்கான யோசனையைச் சொல்! முடிவைத் யிடம் விட்டுவிடு! தலைமை