பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கலைஞர் எடுத்த முடிவுக்கு என்றுமே கட்டுப்பட்டுப் பழகிய உடன்பிறப்பல்லவா ; அதனால் சொல்லுகிறேன்- நிறைய இருக்கிறது பணி! நேரம் குறைவு! நகர்ந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானது! காலம் பொன்போன்றது கடமை கண் போன்றது - புதிதாகப் புரிந்து கொள்ள வேண்டியவைகளா; வை கள்? அல்லவே! அதனால் புறப்படு! "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா! வையம் ஆண்ட வண்டமிழ் மரபே! கையிருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே? மறிக்கொணாக் கடல் போல் மாப்பகை மேல்விடு! மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக! கைக்குள திறமை காட்ட எழுந்திரு." அன்புள்ள, மு.க. 5-2-77