பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 125 குழப்பச் செய்திகளுக்குக் வுரைகள் கொள்கை ரீதியான தெளி தேர்தல் பிரச்சாரப் வழங்குவதும் -உன் பணியாக இருக்கட்டும். நாம் தனித்தே நின்று போட்டியிடுகிறோமா? அல்லது பிற கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு உண்டா? இந்தக் கேள்விக்கு நானும், நாவலரும், பேராசிரி யரும், நமது செயற்குழுவும் நாட்டுக்குப் பதில் அளித்து விட்டதை நீ அறிவாய்! ஜனநாயகத்தைக் காக்க விரும்புகிற வாக்காளர்கள் திரட்டித்தரும் வலிமை, சிதறிப் போய்விடக்கூடாது என்பது நமது கருத்து. கொள்கை வேறுபாடுகளுக்கிடையிலேயும் ஜனநாய கம் போற்றும் பொதுப் பிரச்சினையில் ஓரணியில் நிற்க லாம் என்று நாம் அறிவித்து நாட்கள் எத்தனையோ ஓடிவிட்டன. "கால தாமதத்திற்குக் காரணம் நாமல்ல! அதை யும் கூறியாகிவிட்டது. உரிய நேரத்தில் உகந்த முடிவுக்கு வரமுடியுமே யானால் அது உனக்கும், ஊராருக்கும் உவமை தரும் செய்தி! வரமுடியாவிட்டால், “பழி நம்மீது இல்லை! என் பதைப் பாருக்கு அறிவித்துவிட்டு, நமது பணியினைத் தொடர்ந்திடுவோம்! வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கிடுவர்! அவை எத்தனை இடங்கள்? அதைத்தான் வரும் பத்தாம் தேதி வியாழக்கிழமை யன்று சென்னை சீரணி அரங்கக் கூட்டத்தில் அறிவிக்க ருக்கின்றோமே!