பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அவனது கிழிந்துபோன உதடுகள் ருக்கின்றன. கலைஞர் காட்டிக்கொண்டி ஆம்; அந்தத் தொழுநோய் பிடித்தவன் தான் அந்தத் தோகையின் காதலன். அவனைத்தான் காலில் விழுந்து தொழுகிறாள். தழுவிக்கொள்கிறாள். அந்த அலங்கோல மேனியில் முகம் புதைத்துக் கொஞ்சுகிறாள். உடன்பிறப்பே, மகாராணிக்கு எப்படி ஒரு ஆசை பார்த்தாயா? கட்டழகுக் கணவன், கட்டிலிலே கண்ணயர்ந்து கிடக்கும்போது அவனை விடுத்துத் தொழுநோயாளி யின் தோளில் தொத்தும் கிளியாகிறாள். , இதைப் போலத்தான் இன்றைக்குச் சில எழுத்தா ளர்கள், பேச்சாளர்கள்; தங்கள் கட்சிப் பிரச்சாரத்திற் காக மாற்றுக் கட்சியினை, அதிலும் குறிப்பாக நம்மைத் தாக்குவதற்காக எங்கே இழிமொழிகள் இருக்கின்றன எனத் தேடி ஓடுகிறார்கள்; தேன் சொட்டும் தமிழ்ச் சொற்கள் இருந்தாலும் அதனை விடுத்துத் தேள் கொடுக் குச் சொல் தேடி அலைகின்றார்கள். அரசியல் விளக்கம் தர தமிழ் அகராதியில் வார்த்தைகளா இல்லை? ஏரா ளம் இருக்கின்றன. அவர்களுக்கு அந்த வார்த்தைகள் சுவைக்கவில்லை. 'யசோதரா காவியத்தில் வரும் மகாராணிக்கு தொழுநோய் கொண்ட யானைப் பாகனின்மீது காதல் ஏற்பட்டது போல இவர்களுக்கு இப்படிப்பட்ட வார்த் தைகள் மீதுதான் வற்றாத பாசம்! தணியாத அன்பு! எனவே அவர்கள் அந்த வழியே தங்களுக்கேற்ற அரசியல் வழி எனத் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு இனி அவர்களைத் திருத்துவது என்பது முடியாத காரியம்!