பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 உகலைஞர் அமைத் திலும் அந்த மண்டபத்தின் முகப்பில் “கைராட்டை” யொன்றைப் பெரிய அளவில் கழக அரசு திருந்தது. ஆனால் கழக ஆட்சி அகற்றப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாக அந்த “கைராட்டை எடுக்கப்பட்டு விட்டது. காமராஜரின் காந்தீயப்பற்றையும் எளிமை யையும் உணர்த்தவே அந்த முகப்பு அமைக்கப்பட் டிருந்தது. புதிய காங்கிரஸ், பழைய காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளின் கொடிகளிலும் கைராட்டைச் சின்னம்தான் இப்போதும் இருக்கிறது. ஆனால் காமராஜர் மண்டபத்தில் கழக அரசு மிகப் பெரிய அளவில் அமைத் திருந்த ராட்டையைத் தூக்கித் தூளாக்கி எறிந்துவிட் அப்பொழுது காமராஜரின் ஆத்மா” கண்ணீர் வடிக்கவில்லையாம்! இப்பொழுது கருணாநிதியும், ப. ராமச்சந்திரனும் சந்தித்தால் மட்டும் அந்த “ஆத்மா” கண்ணீர் வடிக்குமாம். டார்கள். . 6 அரசியலில் எத்தனையோ மாறுதல்கள்! உறவுகொண்ட கட்சிகள் உறுமிக்கொள்வதும் உண்டு! உறுமிக் உறுமிக் கொண் டிருந்த கட்சிகள் உறவு கொண்டாடுவதும் உண்டு! இந்திராகாந்தி அவர்களைக் காங்கிரசின் உறுப்பின ராகக்கூட இருக்கக்கூடாதென்று காமராஜர் தீர்மானம் நிறைவேற்றிய காலமும் இருந்தது! பிறகு அதே காமாராஜரும் இந்திரா காந்தி அம்மையாரும் புதுவை மாநிலத் தேர்தலில் கட்சி உடன்பாடு கொண்டு ஒரே மேடையில் பேசியதும் உண்டு. அதற்குப் பிறகு இந்திரா காந்தி அவர்கள் அவசர நிலைப் பிரகடனம் செய்ததையும் அரசியல்வாதிகளை மிசாவில் கைது செய்ததையும் பத்திரிகைத் தணிக்கை கொண்டு வந்ததையும் காமராஜர் அவர்களே மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய பேச்சுக்கள் அப்போதே 'நவசக்தி' ஏட்டில் கொட்டை எழுத்தில் வெளிவந்ததும் உண்டு! சஞ்சீவரெட்டியும் நானும் நண்பர் ப. ராமச்சந்திரனும் நண்பர் ராஜாராமும் சந்தித்தோம் என்பது உண்மை