பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலை - பூச்செண்டு - மணம் தரும் அத்தர் ! உடன்பிறப்பே, விடுத்த அழைப்பினையேற்று கையில் ஓங்கிப் பிடித்த கொடியுடன் வியாழனன்று று மாலை கடற்கரை வெண் மணற் பரப்பை நோக்கி அணி அணியாக நீ வந்த காட்சி கண்டு பூரித்துப் போனேன். சென்னைச் சீரணி அரங்கை நோக்கிக் காமராஜர் சாலையைக் கடந்து கடற்கரைப் பெருவெளியில் சங்கமமாவதற்காக வந்து கொண்டிருந்த சைக்கிள்களாயினும், குதிரை வண்டிகளாயினும், அணி வகுப்புக்களாயினும் இருவண்ண இலட்சியக் கொடியை ஏந்தியிருந்த எழிலையும் - எழுச்சியையும் - எழுத்துக் களால் விவரித்திட இயலாமல் திண்டாடுகிறேன். அந்தக் காட்சியின் மாட்சிக்கோர் உவமை தேடி அலைகிறேன் கிடைக்கவில்லை. ஆண்டு ஒன்று கடந்த பிறகு பெருவெளியில் கூடு கிறோமே; ஆயிரம், பதினாயிரம்-அதிகம்போனால் ஐம்பதா யிரம், லட்சம் என்ற அளவில்தான் இருக்கும் கூட்டம்; அதிலும் விடுமுறை நாள் அல்லாத வியாழக்கிழமை கூடுகிறோம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஒருசில கட்சிகள் இருக்கின்றன அவைகளைப் போல் ஆட்களை யும் லாரிகளையும் வாடகைக்குப் பிடித்துச் சேர்க்கப்பட்ட கூட்டமல்ல அது! ஆயிரமாயிரமாய்க் கூடினர் என்று கூறுவதற்குப் பதிலாக லட்சோப லட்சம் மக்கள் - கூடினர் என் று கூறிடும் வண்ணமன்றோ அமைந்தது அந்தக் கூட்டம்!