பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கலைஞர் போடுகிறது? நடை தள்ளாடுகிறது!" என்று புள்ளி விவரங்களை அள்ளிக் குவித்துப் பேராசிரியர் ஆற்றிய உரையின அழகை நீயும் நானும் நினைத்து நினைத்து மகிழ்கிறோம் அல்லவா? - - எனக்குத்தான் அன்று சற்று கடினமான வேலை! ஆம்; வேட்பாளர்களின் முதல் பட்டியலைப் படித்தேனே -அதைத்தான் சொல்கிறேன். எதிர்பார்த்தவாறு நடந் திருந்தால் கழகத்திற்கும் - ஜனதா கட்சிக்கும் - சமநிலை எண்ணிக்கையில் இடங்கள் என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தால் பத்தொன்பது இடங்களுக்கான வேட் பாளர்களைத்தான் தலைமைக் கழகச் சார்பில் அறிவித்திருப் பேன். அதற்கு வழியில்லாமல் போயிற்று. நல்லதோர் முடிவு வரும் என்று நானும் மற்ற கழகத் தலைவர்களும் ஆட்சி மன்றக் குழுவினரும் கடற்கரைக் கூட்டத்திற்குக் கூட சற்று தாமதமாக வரலாம் என்று கட்சி அலுவலகத் தில் காத்திருந்தோம். காத்திருக்கும்போதே ஜனதா கட்சியின் சார்பில் பதினோரு வேட்பாளர்களின் பெயர்களும், தொகுதிகளும் வானொலியில் அறிவிக்கப்பட்டதைக் கேட்டோம். அதன்பிறகே இருபத்திநான்கு பேர் போட்டியிடும் முதல் பட்டியலை அறிவிப்பது என்ற முடிவுக்குத் தள்ளப் பட்டோம். ரு இரு கட்சிப் பேச்சுவார்த்தை என்பது எண்ணிக்கை யைப் பொறுத்தது மட்டுமல்ல; யார் யாருக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பதையும் இருசாராரும் விவாதித்து ஒருமித்த முடிவுக்கு வந்தாக வேண்டிய ஒன்றாகும். அந்த நிலை இந்தப் பேச்சுவார்த்தையில் கடைப்பிடிக்கப்பட வில்லை. அதனால் தான் இவ்வளவு குழப்பங்களும்! உடன்பாடு பேசுகிற கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்து தொகுதி நிலவரங்களை