பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடி தம் 7 இருக்கச் செய்த பெருமை தன்னையே சேரும் என்று ஒரு நண்பர், விழா ஒன்றில் குறிப்பிட்டார். அதுபற்றி நான் பேசும்போது; "எங்களை ஒற்றுமைப் படுத்தியதாக யாரும் பெருமை தேடிக்கொள்ள முடியாது. காரணம்; உடன்பாடு கொள்ளுகிற மனப்பக்குவமும், விட்டுக் கொடுக்கிற தன்மையும் எங்களிடையே இல்லா திருந்தால் எவராலும் எங்களை ஒற்றுமைப்படுத்திட இயலாது.ஆகவே நாங்கள் ஒன்றுபட்டு இருப்பதற்குக் காரணம்; அண்ணா எங்களை வளர்த்த முறையே ஆகும். என்று விளக்கமளித்தேன். பேராசிரியர், இப்போதெல்லாம் அதிகம் அதிகம் எழுதுவ தில்லை. முன்பு நிறைய கட்டுரைகள், நூல்கள் எழுதுவ துண்டு. பத்து ஆண்டுகட்கு முன்பு அவரைப் பாராட்டி நடை பெற்ற நிகழ்ச்சியொன்றில் அவரது எழுத்தின் எழுத்தின் சிறப்பு குறித்து நான் பின் வருமாறு குறிப்பிட்டேன். நாங்கள் உங்களுக்காக எழுதுகிறோம், பேராசிரியர் போன்றவர்கள், எங்களுக்காக எழுதுகிறார்கள்” என்பது தான் அது! - தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர் என்று மூன்று பொறுப்புகளைக் கழகத்தில் நாங்கள் ஏற்றிருந்தாலும், அமைச்சர்களாகப் பணியாற்றியிருந் தாலும், நாங்கள் பெரியாரின் மாணவர்கள், அண் ணா வின் தம்பிகள் என்ற நிலையில் எங்கள் நெஞ்சங்களை இணைத்துக் கொண்டிருக்கிறோம். இதயத்தால் என்றும் பிரியாத எங்களில் ஒருவருக்குப் பிறந்த நாள் விழா என்கிறபோது மகிழ்ச்சிக் கடலாகிறது மனம்! அந்த மகிழ்ச்சியில் வாழ்த்துகிறேன்; வாழ்க பேராசிரியர்! வாழ்க! வாழ்க !! அன்புள்ள, மு.க. 20-12-76