பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகாத மனிதர் அவர்! உடன்பிறப்பே, C இன்றைய கடிதம், ஒரு தத்துவ அறிஞனைப் பற்றிய தாகும். உலகில் தத்துவப்பேரறிஞர்கள் பலர் தோன்றி யிருக்கிறார்கள். அவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் அல்லது எந்தச் சூழ்நிலைக்காகவும் தாங்கள் சரியென்று ஏற்றுக்கொண்ட தத்துவ உண்மைகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்ததில்லை. மேல்நாட்டில் தோன்றிய தத்துவ அறிஞர்களில் புகழ்பெற்ற ஒருவரின் பெயர் “ஸ்பினோசா” என்பதாகும். மறுமலர்ச்சி யுகத்தைத் தொடர்ந்து கம்பீரமாகத் தனது தத்துவக் கருத்துக்களை வெளியிட்ட சிறப்புக் குரியவர் அவர். அறிவியல் குறிக்கோளும், விஞ்ஞான நோக்கமும் கொண்டு அவரது தத்துவக் கருத்துக்கள் வெளியிடப் பட்டன. கடவுளைப் பற்றியும், சமயங்களைப் பற்றியும் அவர் அறிவித்த தத்துவங்கள், பெரும் எதிர்ப்புக்கு உள்ளாக நேர்ந்தது. யூத குடும்பத்திலே பிறந்த அவர், யூதர்களா லேயே வெறுத்து ஒதுக்கப்பட்டார். அவர் ஒரு "அறிவு முதற் கொள்கையாளர்” என்று யூதர்களால் விமர்சிக்கப் பட்டு தனிமையாக்கப்பட்டார்.