பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 1 I முழுவதையும் தன் அக்காளிடமே திருப்பிக் கொடுத்து விட்டு ஆம்ஸ்டர்டாமிலிருந்து வெளியேறி தனிமையான வாழ்க்கையைத் தொடங்கினார். கண்ணாடி வில்லைகளை மெருகேற்றித் தரும் தொழிலை நடத்திக் வாழ்க்கையின் குறிக்கோளான கொண்டு, தத்துவ ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். 6 என்புருக்கி நோய் அவரைப்பற்றிக் கொண்டு, உடல் நலத்தைத் தேய்க்கத் தொடங்கியது. அவர் நல்ல உடை களை அணிவதைக் கூட வெறுத்து ஒதுக்கினார். வசதி படைத்த பலரும் அவரது வாழ்க்கையை மேம்படுத்த மு னைந்தனர். அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. நல்ல உடைகளை, ஆடம்பர உடைகளை அளித்தனர். ‘"மட்ட மான பொருளுக்கு உயர்ந்த உறைகள் தேவையில்லை" என்று அவர் கூறி, அந்த உடைகளைத் திருப்பித் தந்து விட்டார். மிகப் பெரிய வணிகர் "சைமன்டி விரிஸ்” என்பவர், ஸ்பினோசாவின் அறிவுத் திறனில் உள்ளத்தைப் பறிகொடுத்துத் தன் சொத்துக்கள் முழுவதையும் அவருக்கு எழுதி வைக்க முன் வந்தார். ஸ்பினோசா, அதை மறுத்துவிட்டு அந்தச் சொத்துக்களை முறையாக உரிமை உடையவர்களுக்கே எழுதி வைக்குமாறு கூறிவிட்டார்.. பிரஞ்சு நாட்டு மன்னன் பதினான்காம் லூயி, அவரை அழைத்து ஒரு வேண்டுகோள் விடுத்தான். "உமது அடுத்த நூலை எனக்கு காணிக்கை என்று குறிப்பிட்டு வெளியிட்டால், நீர் விரும்பு கிற அளவுக்குசன்மானம் வழங்குகிறேன்” லூயி மன்னனின் இந்த வேண்டுகோளுக்கு ஸ்பினோசா அளித்த பதில் என்ன தெரியுமா? “நான் உண்மையாகப் பாராட்ட முடியாத ஒருவரை ஒப்புக்காகப் புகழ்ந்து பரிசு பெற விரும்பவில்லை.