பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடி தம் 15

9

பருந்துகள் முட்டையிட்டு அடை காப்பதற்கு ஏற்றதும், ஓமை மரங்களால் சூழப்பட்டதுமான குகை யொன்றில் பெண் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றெடுத்துக் களைத்துப் படுத்திருக்கிறது. குட்டிகளைக் காத்து நிற்கும் பெண் நாயின் பசிக்கொடுமையை அருகே இருக்கும் ஆண் நாய் உணருகிறது. "நாதா எனக்குப் பசி எடுக்கிறது என்றா நாய் கேட்டிருக்கும்? முடியாதல்லவா? குறிப்பால் உணருகிறது. உணர்ந்தவுடன், தன் காதலிக்கு இரை தேடக் கிளம்புகிறது. எதிர்ப்படும் ஆண் பன்றி ஒன்றின் மீது பாய்கிறது. அந்தப் பன்றி வீழ்கிறது. அது கண்டு அந்தப் பன்றியுடன் இணைந்திருந்த பெண் பன்றி அலறி ஓடுகிறது. அவ்வாறு ஓடுகின்ற பெண் பன்றி உராய்வ தால் அசைந்திடும் ஈந்தின் செங்காய்க் குலைகள் உதிரு கின்றன. உதிர்ந்த காய்களின் முற்றிய விதைகள் பரவிக் கிடக்கும் வன்மையான நிலம், அந்தக் காட்டு நிலம். அந்த வன்னிலத்தைக் கிணறு தோண்டுகிற தொழில் மேற் கொண்டுள்ள "கூழ் ஆர் கூவலர்' என்போர் கிணறுகளை உருவாக்கக்குந் தாலி எனும் கருவிகளைக் கொண்டு ஆழப் படுத்துகின்றனர். வன்னிலமானதால் எவ்வளவு ஆழமாகத் தோண்டியும் கூட தண்ணீர் கிட்டவில்லை. எனவே அவர்கள் அந்த முயற்சியைக் கைவிட்டு, ஆழ் குழிகளை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடு கின்றனர். அந்தக் குழிகளின் வாயைக் காட்டுத் தழைகளும், கிளைகளும் மூடிக்கொண்டிருக்கின்றன. யானைக் கூட்டமொன்று று தம் தம் கன்றுகளுடன் அவ் வழியே வருகிறது. அவற்றின் பார்வையில் அந்தத் தழை மூடிய குழிகள் பட்டுவிடுகின்றன. ஓகோ! நம்மை ஏமாற்றிக் குழியிலே விழவைத்து பிறகு பிடித்துக் கொள்ளும் நோக்கத்துடன் வேட்டு வர்கள் தழை பரப்பிய குழிகளைத் தயாரித்துள்ளனர்" என்று யானைகள் எண்ணுகின்றன.