பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ! உட ன்பிறப்பே, கிறிஸ்துமஸ் விழா உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவப் பெருமக்கள் போற்றி புகழ்ந்தேற்றும் இயேசு நா தரின் அமைதி நிறைந்த முகப்பொலிவு நம் கண் முன்னே தோன்று கிறது. மனித சமூதாயத்தை நல்வழியில் நடத்திச்செல்ல அவர் எடுத்த முயற்சிகளுக்கு மனித சமுதாயத்தின் ஒரு பகுதியினரே குறுக்கே நின்றது மட்டுமல்ல; அவரை மிகக் கொடிய முறையிலே சிலுவையிலே அறைந்தும் களிப்புற்றுக் கூத்தாடினர். எந்தச் சிலுவையிலே அவரை வைத்து ஆணிகள் அடிக்கப்பட வேண்டுமோ, அந்தச் சிலுவையை நட வேண்டிய "கொல்கொத்தா" என்னுமிடத்திற்கு அவரே தூக்கிச் செல்ல வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்படு கிறது. தன் உயிரை முத்தமிடத் துடிக்கும் அந்தச் சிலுவையை அவரே தூக்கிக் கொண்டு நடக்கிறார். சுமக்கும் சிலுவையின் கனம் தாங்க முடியாமல் மண்ணில் விழுந்தும் எழுந்தும் தன் பயணத்தை நிறுத்தா மல் தொடருகிறார். அந்தத் தியாகப் பயணத்தைக் கண்டு ஜெருசலேம் நகரத்துப் பெண்மணிகள் கதறி அழுகின்றனர். சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்கும் அந்தப் பொறுமையின் கருவூலத்தைச் சவுக்கு கொண்டு அடித்து வதைக்கிறார்கள். அந்தத தியாகத் திருமேனி முழுதும் குருதி கொப்பளிக்கிறது. அடிகளின் தழும்புகள் பச்சை ரத்தக் கோடுகளாகக் காட்சி தருகின்றன.