பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர்நீர் கொதிக்கிறதோ? உடன்பிறப்பே, குறுந்தொகையில் “மிளைக் கந்தனார்" என்னும் புலவர் பெருமகனார்; அறிவு மிகுந்த தோழி யொருத்தியைத் தமிழோவியமாகத் தீட்டிக் காட்டுகிறார். அவளுக்கு உயிர்த்தோழி ஒருத்தி. அந்தத் தோழி இளங் காளையொருவனை நம்பித் தன் இதயத்தைப் பறிகொடுத் தாள். இன்ப துன்பங்களில் இணைபிரியாது வாழ்வான் என்று நம்பினாள். அவள் நம்பிக்கையை நாசமாக்கி சென்று விட்டான். விட்டு அந்தக் காதலன் பிரிந்து காதலியின் நெஞ்சம் கலங்கியதை அவளின் ஆருயிர்த் தோழி உணர்ந்து வருந்தினாள். ஒரு நாள் அவனை அந்தத் தோழி காண நேர்ந்தது. பார்த்தவுடன் அவளுக்கு உள்ளம் கொதித்தது. “ஏன் இப்படிச் செய்து விட்டாய்?" என்று விழிகளில் பொரி பறக்க வினா எழுப்பினாள், அவனை நோக்கி! C அவனோ பதிலேதும் சொல்ல முடியாமல் திகைத்தான். அவள் அவனிடமிருந்து பதிலைப் பெறாமல் நகருவதாக இல்லை. ஏதாவது சொல்லிச் சமாளித்து விட்டு நழுவி விடவேண்டும் என்று அவன் முடிவு செய்தான். அதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. "உன் காரணம் கேள்! தோழியை நான் பிரிந்தமைக்குக் என்ன தெரியுமா? சொல்லுகிறேன், என்ன