பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் பாரி மன்னன் வாழுகின்ற பறம்பு மலையீன் கண் இருவரும் இன்பமாக நடந்து சென்றபோது அவளைத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னேன். அவளோ, உவர்க்கக்கூடிய கொதிக்கும் நீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்" என்று ஏதோ ஒரு பதிலைச் சொல்லி மழுப்பினான். 23 அவனைத் தன் தோழிக்குச் சினம் பொங்கியது. அவனைத் வார்த்தைகளால் வீழ்த்திவிட்டாள். அவனும் தலையைத் தாங்கப்போட்டுக் கொண்டு அந்த இடம் விட்டு அகன்றுவிட்டான். அவன் நாணித் தலை தாழ்த்தும் வண்ணம், அந்தத் தோழி என்ன பேசினாள் என்பதைப் புலவர் அழகுறக் கூறுகிறார். "என் தோழியுடன் நீ பழகிக் கொண்டிருந்த போது, அவள்; வேப்ப மரத்தின் இளங்காயை உனக்குக் கொடுத்தால்கூட, அதை வாங்கிச் சுவைத்துப் பார்த்து - அட்டா! கற்கண்டுக் கட்டியைப்போல் இனிக்கிறது உன் கையால் என்று அவளைப் கொடுத்த காரணத்தால் - புகழ்ந்து கொண்டிருந்தாய். இப்போது ஐயனே! உன் நிலை அவ்வாறல்ல! அன்பில்லாத காரணத் தால் அவள்மீது குறை சொல்லுகிறாய், பாரி மன்னனின் பறம்புமலையில் பனியெனக் குளிர்ந்த சுனையிலேயுள்ள இயற்கையிலேயே குளிர்ந்த நீரை, தைத் திங்களில் உனக்கு அவள் அளித்த போதிலும் அது வெம்மையுடையது என்று கூறுகிறாய்! என் செய்வது? அன்று வேப்பங்காய் கற்கண்டாக டாக இனித்தது! இன்றைக்கோ, குளிர்ந்து தெளிந்த பறம்புமலைத் தண்ணீர் கொதிக்கிறது என்கிறாய். அது நீரின் குற்றமல்ல. உன் மனத்தில் உண்மையான அன்பு இல்லை என்பதை அறியாமல் போனதுதான் குற்றம்.'