பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கலைஞர் உடன்பிறப்பே, உரைநடையாகத் தீட்டியுள்ள இந்தக் கருத்தைத்தான் தோழி கூறுவதுபோல - தமிழ் கொழிக்கும் கவிதையாகத் தருகிறார் குறுந் வளம் தொகைப் புலவர். “வேம்பின் பைங்காய் என் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய! - அற்றால் அன்பின் பாலே." பறம்புமலைச் சுனைநீர் போலக் கவிதையின்பம் பெற முடிகிறதல்லவா? இதுபோன்ற இலக்கியக் கற்பனைகள், இதயத்திற்கு எவ்வளவு இதமாக இருக்கின்றன; பார்த்தாயா? அன்புள்ள மு.க. 28-12-76