பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கலைஞர் வதையே பல்கலைக் கழகத்திற்குப் பாவேந்தர் ஒப்பிட்டார் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்திட வேண்டும். குறிப்பிட்ட வருமானமுடைய ஒரு குடும்பத்தில் ஆண்டுக் காரு குழந்தை வருமானமும் பெருகிடுமானால், வசதி களும் வாய்ப்புக்களு களும் எல்லாக் குழந்தைகளுக்கும் பங்கிடப்பட்டேயாக வேண்டும். இரண்டு குழந்தை எட்டு ரொட்டித்துண்டுகளை களுக்கு நாலு நாலாகப் பிரித்துக்கொடுத்து அவைகள் மனநிறைவோடு உண்டது கண்டு உளங்களிக்கும் தாயும் தந்தையும், அதே எட்டு ரொட்டித் துண்டுகளை ஆறு குழந்தைகளுக்குப் பங்கிட்டு, அவர்களும் ஆறுதல் பெறாமல் குழந்தைகளும் களிப்படையாமல் அவதிப்படும் சாட்சிகள் தவிர்க்கப்பட வேண்டாமா? -- - - வீட்டின் நிலையே இது எனில் நாட்டின் நிலையைச் சிந்திப்பது இன்றியமையாத ஒன்றல்லவோ? கோடி கோடியாகச் செலவழித்துத் திட்டங்கள் - கோபுர உயரத் தில் உணவு தானியக் குவியல்கள் - கோலமிகு சாலைகள் குளிர் தரும் சோலைகள் கல்விச் சலுகையா? கணக்கின்றி வழங்குவோம். மருத்துவ வசதியா? தடையின்றித் தருகின்றோம் - பின் தங்கியோர் நலனா? விரைந்து நிறை வேற்றுவோம் - தாழ்த்தப்பட்டோர்க்கு உயர்வா? தடை யில்லை அளிப்பதற்கு. எல்லாம் சரி; எட்டு ரொட்டித் துண்டு இரண்டு குழந்தைகள் என்றால் வழங்குபவர்க்கும் மகிழ்ச்சி - பெறு பவர்க்கும் பேரானந்தம - ரொட்டித் துண்டு எட்டுத் தான், குழந்தைகள் ஆறு எனில் ரொட்டியும் எட்டியாகுமே; தேவைக்கேற்ப கிடைக்காத காரணத்தால்! கடல்களை மூன்று பக்கமும் எல்லையாகக் கொண் டி.ராமல் கடலின் மீது மிதக்கும் ஒரு தெப்பமாக இந்தியா இருந்திருந்தால் இந்நேரம் கடலுக்குள் மூழ்கியிருக்கும் மக்கள் தொகை தாங்காமல்!