பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிதம் 31 அந்த அளவுக்கு ஆண்டுக்கு ஆண்டு, ஆண்டவன் மீது வழியைப் போட்டுவிட்டு, “அவன் கொடுத்தான் நாமென்ன செய்ய!” என்று குடும்பத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் ந்திய நாட்டில்! ஆண்டவர்களிலே கூட சிவனுக்கு இரண்டு பிள்ளைகள் தான்! இருபத்தேழு பிள்ளைகளைப் பெற்ற குசேலர் தந்த அவலுக்குப் பதிலாக மாடமாளிகைகள், கூட கோபுரங் களைப் பரிசாக அளிக்க ஒரு கண்ணன் இருந்தான். அந்தக் கண்ணன் கூட எல்லோருக்கும் அருள முடியுமா? எப்போதும் அருள முடியுமா? குழந்தைகளை மலர்கள் என்கிறோம் பரல்கள் என்கிறோம் - - மாணிக்கப் அதன் கண்கள் நீலோற்பலம்! இதழ்கள் ரோஜா! சிரிப்பு பிறைநிலா! அசைவு தென்றல்! வடிவு தங்கப்பதுமை! இப்படியெல்லாம் கொஞ்சு தமிழில் குழந்தைகளை வர்ணிக்கும் கவிதை உள்ளங்கொண்டவரை, கொஞ்சம் என்னுடன் இந்தக் குடிசைப் பகுதிக்கு வாருங் கள் என அழைக்கிறேன். - அதோ, கிழிந்த சாக்குப் படுதா தொங்குகிறதே அதுதான் அந்த மாளிகையின் மரகதக் கதவு! சேறும் சகதியும் வழிந்தோடுகிறதல்லவா வளைந்து வளைந்து, அதுதான் அந்த அரண்மனையைச் சுற்றியுள்ள அகழி! அந்த அகழி மீது துள்ளி விளையாடுகிறதே தொப்பை சுருங்கிய ஒரு குழந்தை, அதுதான் அந்த வீட்டு மகாராணி யின் முதல் இளவரசன் -அடுத்து ஒன்று சூம்பிய கால் கைகளுடன் தள்ளாடித் தள்ளாடி ராகம் பாடுகிறதே, அது இளவரசி மகாராணியின் தோள் மீது ஒன்றும், மடிமீது ஒன்றும் (எலும்புக் குச்சிகளாய்த் தேரைகள்போல் ஒட்டிக்கொண்டு சிணுங்கி அழுவதற்கும் ஜீவனில்லா மல் - -