பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 33 யாகிவிடக் கூடாதல்லவா? அதற்குத்தான் குடும்பநலத் திட்டத்தில் அனைவரும் ஆர்வத்துடன் அக்கறை காட்டிட வேண்டும். பிறந்துவிட்ட குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் மட்டுமன்றி, சத்துணவுத் திட்டம் ஒன்றும் ே தாற்றுவிக்கப்பட்டு குடிசைப்பகுதிகளில் உள்ள குழந்தை கள் வலிவோடும் பொலிவோடும் வளர்வதற்கு அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எந்தத் தீவிர முயற்சி களானாலும் அவைகளின் பயன்கள் எத்தனை பேருக்குச் சென்றடைய வேண்டும் என்ற அளவுகளைப் பொறுத்தே வெற்றிகளை ஈட்டிட முடியும். ர் அந்த வெற்றிகளை உருவாக்க அரசு ஆடவர்- பெண்டிர் - இந்த மூன்று தரப்பினரின் ஒத்துழைப்பும் இருந்து குடும்ப நலத் திட்டம் நல்ல வகையில் பரவிட வேண்டும். இந்த மூன்று சாராரின் ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையில் அமைந்ததுதான் சிவப்பு முக்கோண அடையாளமாகும். - - விவ குடும்பநலத் திட்டம் பரவிட அரசாங்கம், அதிகாரி களை நியமிக்கலாம். ஆலோசனைகள் பலவற்றை ரித்துச் சொல்லலாம். அறுவை சிகிச்சைக்கெனத் தனித் தொகை ஒதுக்கலாம் வைகளுக்கெல்லாம் மேலாக அவரவரும் குழந்தைப் பெருக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடியையும் முன் னேற்றத் திட்டங்களில் ஏற்படும முட்டுக் கட்டையை யும் புரிந்து நடந்திட முனைந்திட வேண்டும். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த் திடுவர் முன்னோர்! பெறுவது என்றாலே குழந்தைகள் தான் எனப் பொருள் கொண்டு பதினாறு என்னும் குறிக்கோளை அடையத் தவங்கூட இருந்தவர்கள் க-10-3