பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய ஏடு புரள்கிறது! உடன்பிறப்பே, புத்தாண்டு பிறந்துவிட்டது. 1976-ஆம் ஆண்டு எனும் வாழைமரம், எழுபத்தி ஏழாம் ஆண்டு எனும் இளங்கன்றைத் தந்துவிட்டுக் காலத்தின் மடியில் வீழ்ந்து விட்டது. பனிரெண்டு மாத வாழ்வை பாங்குற நடத்து வதற்கு 1977-ஆம் ஆண்டு பசுங்குருத்தினை விரித்துக் கொண்டு உலக மக்களின் வாழ்த்து கீதத்திலே மெல்ல அசைந்தாடுகிற காட்சியைக் காணுகிறோம். இது கி.பி.1977-ஆம் ஆண்டு அதாவது கிறிஸ்து பிறந்த பிறகு உருண்டோடியிருக்கிற ஆண்டுகளின் கணக்கு. கி.மு.20-ஆம் ஆண்டு! அல்லது 30-ஆம் ஆண்டு என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு கணக்கிடப்படுகிற ஆண்டு களைக் குறிக்கும். கிறிஸ்துவின் பிறப்பை மையமாக வைத்து உலகின் பொதுவான ஆண்டுக் கணக்கு வரை யறுக்கப்பட்டுள்ளது. நாலைந்து நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் விழா வினையொட்டி நான் எழுதிய கடிதத்தில் ஏசுபிரான் தான் ஏறிடவேண்டிய சிலுவையைத் தானே சுமந்து சென்ற தியாக சரித்திரத்தின் புனித ஏடுகளை உனக்குச் சுட்டிக் காட்டியிருந்தேன். அவர் பிறந்தது முதல் சிலுவையில் அறையப்படும் வரையில் அந்தத் தூயவரின் வாழ்க்கைக் குறிப்புகளை முழுமையாகத் தரத் தேவையில்லை. காரணம் அவற்றை நீயே நன்கு அறிவாய்! எனினும் ஆங்காங்கே ஒன்றி