பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வளர்ந்த இயேசுவின் புகழ் புகழ், பரந்து கலிலேயா, தெக்கப்போலி, ஜெருசலேம், கலைஞர் விரிந்தது. யூதேயா, யோர்தான் போன்ற பகுதிகளிலேயிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரது அருள்மொழி கேட்டார்கள். ய அவ்வாறு நிகழ்த்திய சொற்பொழிவுகளில் இாயசு வின் மலைப்பிரசங்கம் வரலாற்றுச் சிறப்பினைப் பெற்றது. ஃ அடக்கமுடையவர்கள் நற்பேறு பெற்றவர் கள். அவர்கள் உலகத்தையே உடைமை யாகப் பெறுவார்கள். ஃ இரக்கம் காட்டுகிறவர்கள் நற்பேறு பெற்ற வர்கள். கடவுள் அவர்களிடம் அன்பு காட்டுவார். ஃ தூய உள்ளமுடையவர்கள் நற்பேறு பெற்ற வர்கள். அவர்கள் உள்ளமே கடவுளின் அருளைப் பெறுகிறது! அமைதி நிலவச் செய்பவர்கள் கடவுளின் மைந்தர்கள் எனப் போற்றப்படுவார்கள். ஃ நீங்கள் உலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள். உப்பு, அதன் சாரத்தை இழந்துவிட்டால் ஒன்றுக்கும் உதவாமல் வெளியே எறியப் பட்டு மனிதர்களால் மிதிக்கப்படும். இதை அறிவீர்கள். ஃ ஒருவன் உன்னோடு தகராறு செய்து, உன் துண்டை எடுத்துக் கொள்ள விரும்பினால் அவனுக்கு உன் சட்டையையும் எடுத்துக் கொள்ள இடம் கொடு. உன்னை ஒருவன் ஒரு கல் தொலைவு வரும்படியாகக் கட்டாயப்படுத் தினால் அவனுடன் இரண்டு கல் தொலைவு செல். உன்னை வலக் கன்னத்தில் அடிப்பவ னுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டு.