பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் ஃ ஃ உங்களிடம் அன்புள்ளவர்களிடம் மட்டும் நீங்கள் அன்பு காட்டினால் பயனில்லை. உங்கள் எதிரிகளிடமும அன்பு கொள்ளுங் கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களின் நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். முதலில் உன் கண்ணில் உள்ள தூலத்தை எடுத்துவிடு. அப்போதுதான் மற்றவனின் கண்ணில் உள்ள துரும்பை எடுக்க உனக்குத் தெளிவான பார்வை ஏற்படும். ஃ உங்களிடமுள்ள ஒளி முத்துக்களைப் பன்றி களின் முன்பு போடாதீர்கள். அவை, தங்கள் கால்களால் அவைகளை மிதித்துத் துவைத்து விட்டு திரும்பி உங்களையே பீறிவிடும். ஃ கேளுங்கள், கொடுக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டுபிடிப்பீர்கள். பிறகு, 39 கீர்த்திமிகுந்த மலைச் சொற்பொழிவுக்குப் இயேசுபிரான் தனது பன்னிரு சீடர்களுடன் பயணம் தொடர்ந்தார். பனிரெண்டு சீடர்களையும் மக்களுக்குத் தொண்டு செய்யுமாறு இயேசு, பணித்தார். அப்படி அனுப்பும்போது சீடர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரை யின் சில பகுதிகளை; உடன்பிறப்பே! உனக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் 6 "சீடர்களே! உங்களை ஓநாய்களுக்கிடையே ஆடுகளைப்போல அனுப்புகிறேன். நீங்கள் பாம்பு களைப்போல விழிப்பு உள்ளவர்களாகவும், புறாக் களைப்போல சாந்தமுள்ளவர்களாகவும் பணிபுரி யுங்கள். மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு சகோதரன்,