பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படமெடுக்கிறார்களே, என்னைப் பார்த்து - ஏன்? உடன்பிறப்பே, திரு.ஏ.வி. எம். செட்டியார்•அவர்கள் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் கட்சிக்குள் ஏற்பட்ட பிணக்குகள் காரண மாக கருணாநிதி ஆட்சியில் சினிமாவுக்கு அதிச வரி விதிக்கப்பட்டது என்று ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். பட உலகில் பொறுப்புள்ள ஒரு பெரிய மனிதரிடமிருந்து நான் இதுபோன்ற ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்க வில்லையென்றாலும், இதைப்போலத் தொடர்த்து செய்யப் படும் தவறான பிரசாரத்திற்கு நான் ஏற்கனவே அளித் துள்ள பதிலின் பகுதிகளை மீண்டும் ஏ. வி. எம். போன்ற வர்களுக்கு நினைவூட்டுகிறேன். தேவையெனில் மீண்டும் பல விளக்கங்களை வழங்கவும் தயாராக இருக்கிறேன். சினிமாவை ஒழிப்பதற்குக் கருணாநிதி சதி செய்தார், கேளிக்கை வரியை உயர்த்தினார், யாரோ ஒரு குறிப்பிட்ட பெருமகனாரை வீழ்த்துவதற்காக “ஷோ டேக்ஸ்" என்ற காட்சி வரியை உயர்த்தினார் என்றெல்லாம் சிலர் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரைப்பட அரங்குகளில் நடைபெறுகிற வரி ஏய்ப்புக் களைப்பற்றியும், சென்னை போன்ற நகர்ப்புற திரையரங்கு களில் வாராந்திர வாடகை என்ற பெயரால் அதிகத் தாகை வசூலிக்கிறார்கள் என்பது பற்றியும், சட்டப் பேரவையிலேயே நான் எடுத்துரைத்து அதன் காரணமாக கேளிக்கை வரி விகிதத்தில் சில மாற்றங்களைச் செய்து;