பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கலைஞர் பாளருக்குச் செல்லாது! விநியோகஸ்தரின் கறுப்புப் பணப் பெட்டிக்குள் போய்விடும். விநியோகஸ்தருக்குத் தந்த கறுப்புப் பணத்தைச் சரிக்கட்ட தியேட்டர் உரிமையாளர் டிக்கெட் விற்பனையில் கள்ளத்தனம் செய்கிறார். அதற் காக ஒரு சில அதிகாரிகளையும் கறுப்புப்பண திருவிளை யாடல்மூலம் கைக்குள் போட்டுக் கொள்கிறார். வரி ஏய்ப்பு நடைபெறுகிறது. - இது எல்லா தியேட்டர்காரர்களுமோ, அல்லது எல்லா விநியோகஸ்தர்களுமோ, அல்லது எல்லா அதிகாரி களுமோ செய்கிறார்கள்' என்று நான் கூற மாட்டேன். ஆனால், இது தங்கு தடையின்றி பெரிய ஊர்களிலும், நகரங்கள் சிலவற்றிலும்கூட கணிசமான அளவுக்கு நடை பெறுகிறது. இப்படி தியேட்டர் அளவிலே உற்பத்தியாகிற கறுப்புப் பணம், விநியோகஸ்தர் அளவிலே இரண்டு மடங்காகப் பெருகுகிறது. உதாரணமாக தியேட்டர் அளவில் குறைந்த தொகை யாக இரண்டாயிரம் ரூபாய் கறுப்புப்பணம் என்று வைத்துக்கொண்டால், அவைகளும், விநியோகஸ்தர் இவ்வாறு பல தியேட்டர்களில் பெறுகிற கறுப்புப் பணமும் சேர்ந்து ஒரு பகுதியில் மட்டும் இரண்டு லட்ச ரூபாய்க்குக் குறையாத கறுப்புப் பணம் பணம் உற்பத்தியா கிறது. பிறகு, இந்தக் கறுப்புப் பணமெல்லாம் சென்னையை நோக்கிச் சில தயாரிப்பாளர்களிடம் அணிவகுக்கத் தாடங்குகின்றன. படத் படத் தயாரிப்பாளர் என்ன செய் கிறார்? ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ என்று ஒப்பந்தம் எழுதிக் கொண்டு, திரை மறைவில் மிச்சமுள்ள ஏழெட்டு லட்ச ரூபாய்களைப் பெற்றுக் கொள்கிற நடிகரைத் தன் படத்தில் நடிக்க வைக்கிறார்.