பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 57 படம் எடுத்து முடிவதற்குள் அப்படிப்பட்ட ஒரு சில தயாரிப்பாளர்கள் படுகிற பாடு; அப்பப்பா! சொல்லத் தரமன்று! "உடும்பு வேண்டாம்; கையை விட்டால்போதும்! என்று பெரிய படத் தயாரிப்பாளர்கள், தங்கள் மிச்ச முள்ள கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் தமிழ்ப் படங்கள் எடுப்பதையே நிறுத்திக்கொண்டார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? பெரிய நடிகரைப் போட்டதால் படம் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. ஆ னால் படத்தயாரிப்பாளருக்கு ய என்ன மிச்சம்? எடுத்த ‘படத்தைத் திருப்பித் திருப்பி எடுப்பது! பாதி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை மாற்றுவது! அல்லது, கதையையே மாற்றுவது— இப்படிப் பட்ட சோதனைகளுக்கெல்லாம் பாவம்; சில படத் தயாரிப் பாளர்கள் ஆளாகவேண்டி நேரிடுகிறது - அதனால் படத்தை விற்ற விலையைவிட, விற்ற விலையைவிட, தயாரித்த செலவு சில நேரங்களில் அதிகமாகிவிடுகிறது. விளைவு என்னவென்றால்; எங்கேயோ பொதுமக்கள் பொழுது போக்கிற்காகத் தந்த பணம் அந்த ஊரிலேயே ஒரு பகுதி கறுப்புப்பணமாக மாறி, அரசாங்க வரி இலாகா வையும் ஏமாற்றி, விநியோகஸ்தர்கள் மூலமாக, தயாரிப் பாளர்களிடம் வந்து அவர்கள் வாயிலாகக் குறிப்பிட்ட சில நடிகர்களின் கைக்கு மாறி விடுகிறது. பட இந்தக் கறுப்புச் சந்தை ஒழிக்கப்பட்டால் தமிழ்ப் த் தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியு மல்லவா? தயாரிப்பாளர்களில் சிலரும், இந்த அரசாங்க விரோதமான கறுப்புச் சந்தைக்கு விதிவிலக்கு அல்ல என்பதையும் நான் சுட்டிக் காட்டவே பட்டுள்ளேன். கடமைப் எனவே திரைப்படத் துறையில் அடிவாரத்திலிருந்து உச்சிவரையில், விரிவடைந்து பரவியுள்ள வரி ஏய்ப்பு