பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படியொரு பொங்கல் வாழ்த்து! உடன்பிறப்பே, “பொங்கல் விழா! தமிழர்களின் பொன்னான விழா! புன்னகை தவழும் விழா! குழலும், யாழும், குழந்தையின் மழலையும், கோதையர் ஆடலும், குமரர்கள் வீரமும் எங்கும் நிறைந் திடும் இனிய விழா! எந்த ஒரு விழாவின் பெருமையும், உழைப்பின் விளைவாகத்தான் அமைய முடிகிறது. அந்த உழைப்பும், உறுதியும் பெருகிட இந்தப் பொங்கல் விழா ஊக்கமளிக் கட்டும். பொங்கல் பொங்கிடும்போது அரிசிகளில் வேறுபாடு இருப்பதில்லை. அவ்வாறே, தலைவர்கள் அவ்வாறே, தலைவர்கள் தொண்டர்கள் என்ற வேறுபாடின்றி தியாகப் பொங்கல் சமைத்திட வேண்டும். அரிசிக்கிடையிலேயும் ஓரிரு கற்கள் இருப்ப துண்டு. அவைகளை, முறத்திலிட்டுப் புடைக்கும் போதே த தாய்மார்கள் பொறுக்கி எறிந்துவிடுவர். அதனையும் மீறி ஒரு கல், உலைப்பானைக்குள்ளே நுழைந்து, நம் பல்லைப் பதம் பார்ப்பதும் உண்டு. ஒரு இயக்கத்தை நடத்தும் நமக்கும் அந்த அனுபவம் நிறைய உண்டல்லவா? பல்லில் பட்ட கல்லை, உடனே தொலைவில் உமிழ்ந்து விடுகிறோம். உலையில் நுழைந்து கொண்ட கல், தன் இயல்புக்கேற்ப இருக்குமே தவிர அரிசியுடன் கலந்து