பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வருகிறதேயல்லாமல் கலைஞர் பிரிவினை எண்ணம் கழகத்திற்கு துளி அளவும் இல்லை என்பதைப் பல முறையும் தெளிவாக வும் திட்டவட்டமாகவும் விளக்கியிருக்கிறோம். கழகத்தில் இருந்துகொண்டே பிரிவினை பற்றி எழுதிய ஒரு வார ஏட்டினைக் கழக ஆட்சிப் பறிமுதல் செய்தது. அந்த ஏட்டின் ஆசிரியர் பிரிவினை மாநாடு நடத்தப் போவ தாகத் தனது ஏட்டில் விளம்பரம் செய்து ஒரு பெரிய கட்டுரையும் எழுதினார். அவரும், அந்த மாநாடு நடத்த முற்பட்டவர்களும் கழக ஆட்சியில் கைது செய்யப் பட்டனர். அதுமட்டுமல்ல; அந்த ஆசிரியர் கழகத்தி லிருந்து நீக்கி வைக்கப்பட்டார். இப்போது அவர், கழக நிழலில் இல்லை. புதிய காங்கிரசின் நிழலில் இருக்கிறார். ஏறத்தாழ ஓராண்டுக் காலத்திற்கு முன்பு பிரிவினை கோரிக்கை எழுப்பியவரைக் கழகம், நடவடிக்கை எடுத்து விலக்கி வைத்தது, அவருக்கு இப்போது காங்கிரசில் புகலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாம், பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிவினை பேசினோம். அதன்பிறகு இந்தியாவின் பாதுகாப்பு, இந்திய ஒருமைப்பாடு - இவற்றில் நமக்குள்ள அழுத்தமான நம்பிக்கையை செயல் மூலமே வெளிப்படுத்தியிருக்கிறோம். அந்நியப் படை யெடுப்புக்களின் பொழுது கழகம் ஆற்றிய பணியும், பணியும் ஆற்றிய அதற்குப் போதிய கழக அரசு சான்றாகும். ய நாம் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்ட பிறகு அதனைக் காங்கிரஸ் தலைவர்களும் வரவேற்றுப் பேசியிருக் கிறார்கள். 1967 - ல் கழகத்துடன் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்களும் தமிழரசுக் கழகமும் தேர்தல் உடன்பாடு கொண்ட தற்குக் காரணம்; நாம் பிரிவினைச் கொள்கையை விட்டுவிட்டோம் என்பது தான்! 1968 -ல் சென்னையில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் முதல்வர் அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர், காயிதே மில்லத், கலியாணசுந்தரம் ஆகியோர்