பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 75 கலந்து கொண்டு மாநில சுயாட்சியை வலியுறுத்தி ஆற்றிய அரிய உரைகள் அப்போதே, எல்லாத் தமிழ், ஆங்கில ஏடுகளில் வெளிவந்துள்ளன. இப்போதும் கைவசமிருக்கின்றன. நூல் வடிவிலேகூட என் உரைகள் அச்சியற்றப்பட்டுள்ளன. அந்த 1971-ஆம் ஆண்டு தி.மு.கழக தேர்தல் அறிக்கையில்- பத்தாவது பக்கம் - நாலாவது “பாரா” வில்; ( "அதிகாரத்துறையிலும் நிதித்துறையிலும் மாநிலங்கள் செவ்வனே செயல்பட முடியாமல் தடைகள் இருப்பதால்; இந்தியா வலுப்பெற்ற தாக இருக்க வேண்டுமென்ற இலட்சியத்திற்கு ஊறுதேடாமல் எந்தெந்த துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு செயல் பட வேண்டுமோ, அந்த அதிகாரங்களை மட்டும் மத்திய அரசிடம் கொடுத்து விட்டு, இதர அதி காரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தி; மறு பரிசீலனை செய்யவேண்டுமென்று இகருதுகிறோம்' என்பதாகவும், அதற்கு அடுத்த ஐந்தாவது “பாரா” வில்; அந்த அடிப்படையில் அகில இந்திய ரீதியில் மாநில சுயாட்சி இயக்கத்திற்கான ஆதரவு திரட்டும் இயக்கத்தைக் கழகம் மேற் காள்ளும்' என்பதாகவும் கழகத்தின் சார்பில் மாநில சுயாட்சிக் காள்கையைத் தெளிவாக்கியிருக்கிறோம். இவ்வாறு தேர்தல் போதுதான் 1971-ஆம் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டில், தி மு.க வுக்கும் க. இந்திரா காங்கிரசுக்கும் தேர்தல் உடன்பாடு ஏற்பட் டிருந்தது என்பதை நாடு மறந்து விடவில்லை.