பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் லன்' றால்; தும் அந்தக் குறிக்கோளை நடைமுறையில் கொண்டு வந்தது ஆச்சரியமில்லை" 79 இவ்வாறு மாண்புமிகு ஓம் மேத்தா பேசியுள்ளார். உடன்பிறப்பே, மந்திரி குமாரி படத்தில் 'கொள்ளை யடிப்பது சிறந்த கலை' என வாதிடும் பார்த்திபன் அந்தக் கதையிலே ஒரு வில்லன். அந்தப் படத்தில் வரும் கதாநாயகன் வீரமோகன். கதையில் வரும் 'வில் பேசுவதெல்லாம் கதாசிரியரின் காள்கை என் கம்பராமாயணத்தில் ராவணன் பேசுவதெல் லாம் கம்பரின் கொள்கையா?பாரதக் கதையில் சகுனி அளிக்கும் விளக்கங்கள் எல்லாம் வேதவியாசர் ஏற்றுக் கொண்ட இலட்சியங்களா? அதைப் போலத்தான் ஒரு கதையில் வரும் வில்லன் பாத்திரங்கள் பேசும் தத்து வங்கள் கதாசிரியரின் தத்துவங்களாக இருக்க முடியாது. இப்படித்தான் வாழவேண்டும் என்பதல்ல; எப்படியும் வாழலாம் என்பது என் கொள்கை” என்று நடிகவேள் ராதா ஒரு படத்தில் பேசுகிறார். அந்தக் கொள்கை அந்தப் பாத்திரத்தின் கொள்கையே தவிர, அந்த வசன கர்த்தாவின் கொள்கையாக இருக்க முடியா தல்லவா? 6 8 மத்திய எப்படியோ, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய "மந்திரி குமாரி" படத்திற்கு மந்திரி ஒருவரால் இப்போது ப்போது விளம்பரம் விளம்பரம் தென்றால் அதைப் பாராட்டி வரவேற்று நன்றி தெரிவிப்பது என் கடமை அல்லவா? விளக்கக் கிடைக்கிற அவருக்கு தேர்தலில் ஈடுபட இருக்கும் கழக வேட்பாளர் களாம் உடன்பிறப்புகளுக்கும் சொல்கிறேன்; தேர்தல் கூட்டங்களில் உரையாற்ற இருக்கும் உடன்பிறப்புகளுக்கும் சொல்கிறேன்; நமது பணியும் நமது கொள்கை விளக்கங்களாக அமைய வேண்டுமே தவிர, எள் முனை அளவும் அமைதி குலை வதற்கு இடம் தரும் வகையில் இருந்திடலாகாது! பதிலும் -