பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணையா விளக்கென அறிவிப்போம்! உடன்பிறப்பே, ஜனவரி 26-ஆம் நாள் குடியரசுத் திருநாள்! மக்க ளாட்சியின் மாண்பினை ஒரு சிறிதும் ஊனப்படுத்தாமல், அதன் மகிமையை அகிலமறியச் செய்யவேண்டிய நாள்! கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் திருநாடு புதியதோர் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் குடியரசு நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தக் குடியரசு நாளில் அந்த அரசியல் சட்டம்; 42-வது திருத்தத்தைச் செய்துகொண்டு உலா வருகிறது. அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் தேவையென்றும் மத்திய மாநில உறவுகளின் அடிப்படையில் பல்வேறு திருத் திருத்தங்களைச் செய்யவேண்டுமென்றும், அந்தத் தங்களின் வாயிலாக வலிமைவாய்ந்த கூட்டாட்சி மத்தி யிலே மலரவும் மக்கள் வளம்பெருக்கும் வாய்ப்புக்களையும், கூடுதலான உரிமைகளையும் கொண்ட மாநில ஆட்சிகள் பூத்துக் குலுங்கவும் வேண்டுமென்றும், அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளம் நொறுங்கிடா வண்ணம் சமதர்ம திட்டங்கள் முற்போக்குக் கொள்கைகள் நிறைவேற்றப் படுவதற்கான வழிவகைகள் காண வேண்டுமென்றும் நாம் எடுத்துக்கூறிய கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டு, தன்னைத்தானே நீடித்துக் கொண்ட நாடாளுமன்றம் 42 - வது திருத்தத்தைச் செய்து முடித்துவிட்டது. க-10-6 ய