பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கலைஞர் வருவது மட்டும் போதாது! காட்டுத் தீ போலன்றி வீட்டு விளக்கு நிதானமாக - சீராக — ஒளிவிட்டு இருளை அகற்றுவது போலத் தொண்டு புரிதல் வேண்டும்” அண்ணா குறிப்பிட்ட காகிதக் கப்பல்கள் மூழ்கி விட்டன. மத்தாப்பு கருகிவிட்டது. காட்டுத்தீயென எழுதிப் பேசினோர் இருந்த இடம் தெரியவில்லை. வீட்டு விளக்கென நமது கழகம் சீராக ஒளிவிட்டுக் கொண்டிருக் கிறது. வேகமாக வீசிடும் புயலுக்கும் சூறாவளிக்கு மிடையே இந்த விளக்கை அணையாமல் காத்து வருகிறோம். ஆனால் “இது அணைந்து விட்டது அதற்காக 5777 ஜனவரி 31- ல் ஆண்டுவிழா கொண்டாடுக என்று புதிய காங்கிரஸ் தலைவர் குடியரசு தினச் செய்தியில் கூறுகிறார். கொண்டாடட்டும்! நன்றாகக் கொண்டாடி மகிழட் டும்! கழகம் அணைந்த விளக்கா? அல்லது அணையா விளக்கா? என்பதை எனது அருமை நண்பர் - புதிய காங் கிரசின் தலைவர் விரைவில் உணரத்தான் போகிறார். அதை அரசியல் பண்புடனும், அமைதியுடனும், அவர் போன்றார்க்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நம்மிட முள்ளது. அண்ணன் தந்த கழகம் அணையா விளக்கு என்பதை அவருக்கும் அவனிக்கும் அறிவிப்போம்! அந்த உறுதியை இந்தக் குடியரசு நாளில் எடுத்துக் கொள்வோம்! அன்புள்ள மு.க. 26-1-77