பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கலைஞர் உலைக்களத்தில் வியர்வை கொட்டி அனலிற் புழுவெனத் துடிக்கும் தொழிலாளியின் உடலை அணைத்து உச்சி மோந்த முதலாளிகளை நீ கண்டதுண்டா? 66 யுமா?" காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான், அவன் காணத்தகுந்தது வறுமையும் - பூணத் தகுந்தது பொறுமை மயும்-பூணத் என்று காதிலே வைரக் கு ண் டலமும், கைவிரல் களிலே வைடூரியக் கணையாழிகளும், ஒளிவிடும் கனதனவான் கனக மணிக்கட்டிலில் இருந்தவாறு கதறியழுத காட்சியை எந்தத் திரைப்படத்திலாவது நீ காண நேரிட்டதுண்டா? "உன் உழைப்பன்றோ, இந்த நாடு. உன் மூச்சன்றோ இந்தச் சமுதாயம் ஊரை வாழவைக்கும் உத்தமத் தோழனே! உனக்குத் தானே உலகமே சொந்தம்!" என்று பற்றற்றப் பதிகம் பாடும் பண்டார சன்னதிகள் திருவாய் மலர்ந்தருளியதாக உன்னிடம் யாராவது தெரிவித்ததுண்டா? உடன் பிறப்பே, என் கேள்விகள் உன்னைத் உன்னைத் திகைக்க வைக்கின்றன அல்லவா? T உழைப்போரை, உருக்குலையப் பாடுபடுவோரை, பாட்டாளியை, தொழிலாளியை, தொண்டு புரிவோரை, வாரும் - ரஸ்புடீனும் லூயி மன்னனும் சந்நிதானங் களும் - சப்ரகூட மஞ்சத்து சுகவாசிகளும் - எப்படியப்பா பாராட்டியிருக்க முடியும்? - - ஆச்சரியமாயிருக்கிறதே! ஆட்டுக்குட்டியை கொல்வதற் காக இச்சகம் பேசியது ஓநாய் என்றுதான் பாலர் பாடத்தில் சிறுகதை படித்திருக்கிறேன் - ரஸ்புடீனாவது, ஜாராவது, உழைக்கும் வர்க்கத்தைப் புகழ்வதாவது என்று நீ என்னைப் பார்த்து வியப்புடன் கேட்பாய் என்று எனக்குத் தெரியும்.