பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கலைஞர் கு உடன் பிறப்பே! உனக்கு ஒன்று புரிகிறதா? கணக் கேட்பது - சர்வாதிகாரி என்று கூறுவது இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் கழகத்திற்குப் புதிதல்ல! 1972-ஆம் ஆண்டில் முளைத்ததல்ல! அறிஞர் அண்ணா காலத்திலேயே அவர் மீதும், கழகத்தின் மீதும் மீதும் சுமத்தப்பட்ட பழைய பழியின் தொடர்ச்சிதான் என்பது; இப்போது உனக்குப் புரிகிறதா? அந்த நேரத்தில் தஞ்சையில் ஒரு சிறப்புக் கூட்டம்! தேர்தல் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படுகிறது. 1961-பிப்ரவரி 13-ஆம் நாள்! நான் கழகத்தின் பொருளாளர்! அந்த நிகழ்ச்சியில் அண்ணா சிறப்புரை யாற்றுகிறார். சிறப்புக் கூட்டத்தின் தலைவர் தோழர் தங்கமுத்து! அவர் முன்னுரையில் குறிப்பிடுகிறார் உருக்கமாக! “அண்ணா அவர்களே! கழகப்பொருளாளர் கருணாநிதியை நாங்கள் கண் என மதிக்கிறோம். அவர் கழகக் கணக்கை சரியாக வைக்கவில்லை என்று சிலர் களங்கம் கற்பிக்கிறார்கள்; கழகத்திற்குள்ளேயே! அதற்கு விளக்கம் தாருங்கள்!” இது தங்கமுத்துவின் வேண்டுகோள். அண்ணா பேச எழுகிறார். ஆம் பேசுகிறார். எந்தச் செயலிலும் முந்தியிருக்கிற தஞ்சை மாவட்டத் தோழர்களாகிய நீங்கள், உங்கள் மாவட்டத்துக்கு ஒதுக்கப் பட்ட தேர்தல் நிதி பங்குத் தொகையைப் பூர்த்தி செய்து அதைத் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளராகிய தம்பி, கருணாநிதியிடத்தில் ஒப்படைத்துப் பெருமிதம் அடை கிறீர்கள். அதைக் கண்டு நானும் பெருமை கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_2.pdf/88&oldid=1692066" இலிருந்து மீள்விக்கப்பட்டது