பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே தேதிகள்! உடன் பிறப்பே, ண்டு சிறு முயலும் சீறியதாம் தன்னை விரட்டி வந்த வேட்டை நாய்களை எதிர்த்து! 'அப்படியொரு வீரமு அந்த மண்ணுக்கு’ என்று பாஞ்சாலங் குறிச்சியை இன்றைக்கும் புகழ்கிறார்கள்! அந்த மானமறவர்ச் சீமையிலே தான், நமது அரசின் சார்பில் விழா எடுத்தோம் நூற்றெழுபத்தைந்து ஆண்டு களுக்கு முன்பு. வெள்ளைக்காரனின் பீரங்கிகளையும்- துப்பாக்கிகளையும் எதிர்த்து, வாள் முனையும் - ஈட்டி முனை யும் காட்டி. தலை தாழாச் சிங்கங்களாக உலவிய பெரு மக்களுக்கு நாம் அமைத்திருக்கின்ற நினைவுச் சின்னம், கண்டு கண்டு மகிழத் தக்கது! - ரித் தொகையைக் கூடக் கட்டத் தேவையில்லை; வரி கொடுக்க இசைகிறேன் என்ற உறுதிமொழி மட்டுமே போதும்" என்று கும்பினியார் கூறிய போதும், ற வரி கொடுக்க இசை சைகிறேன் என்றால், வளைந்து கொடுக்க இசைகிறேன் என்றல்லவா பொருள்?" எனக் கேட்டு, இறுதிவரை போரிட்ட, புலி நிகர்த்த வேந்தன் வீரபாண்டியனும் அவன் தம்பியரும் தளபதியும் - அமைச்சரும் உயிர் தரத்தான் முன் வந்தார்களே தவிர, வரி தர ஒப்பவில்லை! -