பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் ஆற்காடு கூட்டத்திற்குத் கிடைத்தது! 171 'தினமணி'யில் விளம்பரம் ஆற்காடு நகராட்சித் தலைவர் எனக்கு எத்தனையோ முறை மாலை போட்டிருக்கிறார்! அந்தச் செய்தி, 'தினமணி' யில் வந்ததில்லை! இப்போது அவர் எனக்கு மாலை போடவில்லை; அதனால் அவருக்குத் 'தினமணி'யில் விளம்பரம் கிடை கிடைக்கிறது! ஆகவே, பத்திரிகைக்காரர்கள், கழகத்தில் எந்தச் செய்திகளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறதல்லவா? என் செய்வது? நம் வீட்டில் இனியவை நடந்தால் எரிச்சல் தாங்காமல் துடிப்பதும், யாருக்காவது தலைவலி - காய்ச்சல் என்றால் தாங்க முடியாத மகிழ்ச்சி கொள்வதும், சில எதிர் வீட்டுக் காரர்களுக்கு பண்பாடாக ஆகிவிட்டதே; அந்த இயல்பை, அவ்வளவு எளிதாக அவர்களால் மாற்றிக் கொள்ள முடியுமா? அவர்களின் போக்கை மாற்ற முடியாது என்கின்ற போது, நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! ஆயிரங்காலத்துப் பயிராம் இந்தக் கழகத்தைக் காப்ப தில், மனக்கசப்புக்களை மறந்து-துரோகச் செயல்களைத் தூள் தூளாக்கத் துள்ளி எழவேண்டும்! எத்தனையோ சோதனைகளைத் தாங்கிக்கொண்ட து கழகம்! அண்ணா காலத்தில் ஒரு 'துரோகச் சக்தி' முளைத் தது! அது நமது அண்ணனையே இழித்தும் பழித்தும் பேசி யது - எழுதியது! "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" போல், அதன் செயல் அமைந்தது! இப்போது, அண்ணாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு- அவர் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட