பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியாரின் வெற்றி! உடன்பிறப்பே, தொல்லை கொடுக்கிற பிள்ளையைத் தாய் அடிக்கும் போது, அடிக்காதே! வாயால் கண்டித்து வளர்த்திடு" என் று சொல்லுகிற தந்தைகளையும் பார்த்திருக்கிறோம். பிள்ளை என்ன செய்து விட்டான்? சாக்கடையில் தானே விழுந்து புரண்டான் சந்தியில் தானே வம்பு இழுத்தான்- பிக்பாக்கெட் அடித்ததும் பெண்களைத் துரத்திச் சென்றதும் பெரிய குற்றமா? அதற்காகப் பிள்ளையை இப்படி அடிக் கிறாயே? கொலைகாரி" என்று தாயைத் தாறுமாறாகத் திட்டி பிள்ளைக்காகப் பரிந்து பேசுகிற தந்தைகள் சிலரும் நாட்டில் இருக்கிறார்கள். சாதிவெறி, மதக்குரோதம், மூடநம்பிக்கை, இத்யாதி கொடுமைகளை அகற்றுவதற்கு, அடிக்கும் தாயைப் போல் பெரியார் ஆத்திரம் காட்டினார். அடிக்கத் தேவையில்லை வாயாலேயே பிள்ளையைக் கண்டித்துத் திருத்தலாம் என்ற வகையில் தமிழ் நாட்டில் உள்ள படித்த பெருமக்களும் பத்திரிக்கையாளர்களும் நடந்து கொண்டிருப்பார்களே யானால், பெரியார், பிள்ளையைத் திருத்துவதில்-அதாவது சமுதாய நோயைத் தீர்ப்பதில் முழுமையான பெரு வெற்றி அடைந்திருப்பார். சமுதாயத் தீமைகளுக்குப் பரிந்து பேசுகிறவர்கள் மேல் மட்டத்தில் இருந்தார்களே தவிர, பெரியாரின் மீது சீறிவிழு வோர் அணி வகுத்தார்களே தவிர, பெரியார் நோக்கம் சரி தான்; அதை நிறைவேற்றுகிற முறைதான் மாற்றப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/40&oldid=1694538" இலிருந்து மீள்விக்கப்பட்டது