பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 37 வெற்றி பெற்ற தோழரை விரோதியாகக் கருதாமல் அவருடன் இணைந்து கழக வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ளும் பெருந்தன்மையும் கட்சிப் பற்றினையும் நீ பெற்றிருத்தல் வேண்டும். அன்பே! உன்னிடம் பகைமை விதைகளைத் தூ வி கலகத்தை மூட்டிவிட்டுக் கழகத்தைப் பிளவு படுத்துவதற்கு எல்லா தரப்பிலிருந்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. எச்சரிக்கை! அண்ணன் தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றுவதோடு, உழைப்பு - ஒற்றுமை இரண்டின் பொருளும் அறிந்து செயலாற்றுக நீ சிங்கமென! نفی 'நீர் இடித்து நீர் விலகாது' எனும் முதுமொழியை இதயத்தில் பதிய வைத்துக் கொள்க! வெட்டி.வா என்றுரைத்தால் கட்டிவரும் வீரன் நீ என்பதை நாடறியும். சுழன்றடிக்கும் சூறைக் காற்றுக்கு காற்றுக்கு இடையிலேயும் கழகம் என்கிற கை விளக் கு அணைந்து போகாமல் காப்பாற்றும் திறன் படைத்தவன் நீ என்பதைப் பலமுறை உலகத்திற்கு அறிவித்திருக்கிறாய். அந்தத் அந்தத் திறமையை எனக்கும் உனக்கும் நமது முன்னணித் தலைவர்களுக்கும் அளித்தவர் நமது ஆருயிர் அண்ணனல்லவா? அந்த அண்ணன் கண்ட கழகத்தை அந்த அண்ணன் கண்ட கொடியைக் காத்திட இருபதாயிரம் பாடி வீடுகளை அமைத்து பத்து லட்சத்துக்கு மேற்பட்ட சிப்பாய்கள் பணி' புரியப் போகிறோம். நமக்கு அஞ்சா நெஞ்சம் தருவதற்கு அய்யாவும், அன்புவழி காட்டுவதற்கு அண்ணாவும் இருக்கும் போது கவலை எதற்காக? கடிதம் II - 3 அன்புள்ள, மு.க. 1 1 - 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/47&oldid=1694545" இலிருந்து மீள்விக்கப்பட்டது