பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வீரனே! தீரனே! வெற்றிச்சரிதம் கலைஞர் படைக்கும் என் அன்பு உடன்பிறப்பே! அரசியல் கட்சி நடத்துவது என்பது; புதிது புதிதாக ஒப்பனைகளையும், உடைகளையும் மாற்றுவது போலல்ல! அதற்குத் தெளிவான சிந்தனையும், திடமான உள்ள மும், தியாக மனப்பான்மையும் தேவை! அந்தத் தெளிவும், திடமும், தியாக வரலாறுமுள்ள தலைவர்களும் தொண்டர்களும் நிறைந்துள்ள பாசறையே நமது கழகம்! அந்தப் பாசறையிலிருந்து கிளம்பும் படைக் கருவியே! பகைப்புலம் மாய்த்து, பண்பும், பகுத்தறிவும், தமிழ் உணர்வும், உரிமைவேட்கையும், உண்மைத் தொண்டும் நிறைந்த கழகத்தின் வெற்றிக் கொடியை விண்முட்டப் பறக்கவிடு! எங்கே பார்க்கலாம்; என் அன்பே! ஆற்றலை நேரில் கண்டிட புறப்படுகிறேன் இன்று! உடன்பிறப்பே! உன் உன் விழிகளும் என் விழிகளும் சங்கமமாகும் அந்தக் காட்சிக் காண இன்று கிளம்புகிறேன் சென்னையை விட்டு! உன் அன்பு இதயம் பேசும் மௌன மொழிகளுக்கு பொருள் தெரிந்துகொள்ள நேரிலே பாசமுள்ள தயம்! காண்போம் நேரில்! வருகிறது இந்தப் அன்புள்ள, மு. க. 11 - 2 74 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/58&oldid=1694556" இலிருந்து மீள்விக்கப்பட்டது