பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கலைஞர் தொழிலாளர் தோழர்களும் நடந்து கொண்டிருப்பதை மறுத்துக் கூற யாருளர்? உதட்டாலே சோஷலிசத்தை உச்சரித்துக் கொண்டு, உலவு கின்றார் சில தலைவர்கள் நாட்டில்! அவர்களை ஏற்றிப் போற்ற ஏடுகள் உண்டு! நாம் அந்த "நாமாவளி களுக் காக ஏங்கித் தவிக்காமல் தொழிலாளிக்குத் தேவையான மேன்மைமிகு கடமைகளை ஆற்றி, மேதினத்தன்று நிமிர்ந்து நிற்கின்றோம். ம சமதர்ம சங்கீதம் பாடுவோர், தாளம் தவறி, ராகம் குளறி, சுருதிவிட்டுக் கூவிக் கொண்டிருக்கிறார்கள். சாரீரம், லயம் எதுவுமில்லாதவனை 'சங்கீத பூஷணம் என்பது போல், சிலரைச் 'சமதர்மத் தூதர்"கள் என்று வர்ணிக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாம், மெல்லச் சிரிப்போம்! மே தினத்தில் சபதமெடுப்போம். 6 6 உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பது மத்திய - மாநில உறவுபற்றிய உறவுபற்றிய மல்ல; அனைத்துக்கும் பொருந்தும்! சமுதாயத்துக்கும் பொருந்தும். முழக்கம் மட்டு தொழிலாளர் என் அன்பான உடன்பிறப்பே; பேரவை மேலவை நிகழ்ச்சிகளால், உனக்கு நான் எழுதும் கடிதங்கள் தடைப் பட்டன. இனி தொடரும் என் மடல்கள்! மே தினத்தில் என் இதய வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்! அன்புள்ள, மு.க. 1-5-74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/68&oldid=1694568" இலிருந்து மீள்விக்கப்பட்டது