பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசமான முன்மாதிரி! உடன்பிறப்பே, எளிய இனிய இயல்பு படைத்த திரு. தார் அவர்கள் தீடீரென மறைந்தது, வேதனையான செய்தி! பெரும் எதிர்பார்ப்புடனும் - மிகுந்த பரபரப்பு டனும் மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றுக் கொண்ட அவரை, திடீரெனப் பதவி விலக்கி - சோவியத் தூதராக ஆக்கினார்கள்; நீண்ட நாட்கள் அந்தப் பாறுப்பை வகிக்க முடியாமல், பழகுதற்கினிய அந்தத் றமையாளர் மறைந்துவிட்டார்! அதற்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டி ருக்கும் போதே, பிரதமர் இந்திர கந்தியின் தேர்தல் க செல்லாது என்ற தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தகவலை வானொலி அறிவித்தது! அப்போது நான், தஞ்சை மாவட்டம் முத்துப் பேட்டையில் இருந்தேன்; பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்; 'கழகத்தின் மற்ற தலைவர்களைக் கலந்து கொண்ட பிறகே கருத்து அறிவிக்க முடியும்' என்று கூறி விட்டுச் சென்னை வந்தேன். - நாவலர் - பேராசிரியர்-மற்றும் கழக முன்னணியினர் இடம் கலந்துரையாடிய பிறகு, கழகத்தின் கருத்து அறிவிக் கப்பட்டுள்ளதை, நீ ஏடுகளில் கண்டிருப்பாய்! 'உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு- அதனையேற்றுப் பதவி அல்லது பதவியில் விலகுவது முறையா தொடர்ந்து