பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதை நினைப்பது? உடன்பிறப்பே, உனக்குக் கடிதம் எழுதவே சிலநாட்களாக என்னால் முடியவில்லை. எத்தனையோ கவலைகளுக்கிடையே இதோ தயத்தை உலுக்கும் மற்றொரு கவலையும் என்னைப் பற்றிக்கொண்டு விட்டது. வாய்விட்டு அலறி அழுதால் நெஞ்சி சுமை குறையும் என்பார்கள். உள்ளத்தில் உள்ளதையெல்லாம் எழுத்துக்களாகக் கொட்டி சுமையைக் குறைத்துக் கொள்ள எண்ணினாலும், சுமையை உன் நெஞ்சில் ஏன் என் அந்தச் தூக்கிவைக்கவேண்டும் என்ற சங்கடமான கேள்வியும் ஏழத்தான் செய்கிறது. 1 இதோ 9 6 6 காலமெல்லாம் 'கட்சி 9 9 கட்சி என்று அலைந்து கொண்டிருந்த உழைப்பின் உருவம் எரிந்து, தணலாகி, சாம்பலாகி, மண்ணோடு கலந்து விட்டது. எந்தக் காரியமானாலும் என்.வி.என்.எங்கே? கூப்பிடு! என்று பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், ஏன், நாமும் தேடிக் கொண்டிருந்த அந்த தீபம் அணைந்துபோய் விட்டது. ஏறத்தாழ நாற்பது நாட்களுக்கு மேல் நோயுடன் கடுமையான போராட்டம். அந்தப் போர்க்களத்திலும் கூட அவரது உதடுகள் எதை உச்சரித்தன? அவரது உள்ளம் எதைப்பற்றிப் பேசியது? பார்க்க வருகிறவர்கள் அவரைப் பார்த்துக் கண்ணீர் கொட்டுவார்கள். அவரோ, அவர்களைப் பார்த்து கழகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தழு தழுத்து தொனியில் கேட்டுக் கொள்வார்.