பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கலைஞர் க வைரமுடி சூட்டுவதாக யாரும் கருதவோண்டாம்" என்று தானே மனந்திறந்து குறிப்பிட்டார்! நான் இறுதியாகப் பேசியபோதுகூட "சிறு துரும்பும் பல்குத்த உதவும்! அதைப்போல இந்தச் சிறு துரும்பைப் பயன்படுத்திக் கொள்க! - என்றுதானே கேட்டுக் கொண்டேன். இராம காதை, பெரியவர் நினைவூட்ட வேண்டிய சிறு திகாசமல்லவே! பக்தவத்சலத்துக்கு இலங்கைக்குப் பாலம் அமைத்தபோது அணில்கூட சிறு கற்களைக் கொண்டுவந்து குவித்து இராமனின் பாராட்டைப் பெற்றதாக பக்தவத்சனார் அவர்களே பல டங்களில் உவமை கூறியிருக்கக் கூடுமே! தகுதி பற்றிப் பேசுகிறார்! தகதக வெனக் குதிக்கிறார். தணலை அள்ளிக் கொட்டுகிறார். 8 A அய்யா! மிக மேலான இடத்தில் பிறந்து, மேலான படிப்புப் படித்து, மேலான பதவிகளை வகித்தவரே! . என் தகுதி உமது அளவுகோலின்படி எல்லாவகை யிலும் கீழானதுதான்! ஆனால் நடப்பவைகள் நல்லவை களாக நடக்கட்டும்" என்று எண்ணுவதில் என் தகுதியும், று எங்கள் கழகத்தின் தகுதியும் - மாற்றாராலும் பாராட்டப் படுகிறது. $ 9 ப என்பதைத்தான் பெரியவருக்கு நான் பதிலாக அளிக்க வேண்டியதிருக்கிறது. உன்னை உடன்பிறப்பாகப் பெற்றி ருக்கின்ற ஒரு தகுதி போதும் எனக்கு! அன்புள்ள, மு. க. 24 875