பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பவளவண்ணன் ஒரு பாடம்!" உடன்பிறப்பே, இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தான் தவை வாழ்க்கை என்று தத்துவம்கூற யார் தயவும் யில்லை. அது நமக்கே நன்றாகத் தெரிந்த ஒன்றுதான். அதிலும் என்னைப் பொறுத்தவரையில் எந்த மகிழ்ச்சிகர மான நிகழ்ச்சியையும் எண்ணிப் பார்த்து இன்பமடையும் நிலைமை ஓரிரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது கிடை யாது. என்னுடன் நெருங்கிப் பழகுகிற நண்பர்கள். கழக முன்னணியினர் இதனை நன்கு அறிவார்கள். அறந்தாங்கி மாநாட்டுச் றப்பு குறித்து வெற்றிக் களிப்புடன் சென்னைக்குத் திரும்பிக் ரும்பிக் கொண்டிருந்தேன். தாம்பரத்தில் நாளிதழை வாங்கிப் பார்த்தபோது, அறந் தாங்கி பற்றிய இனிய நினைவுகள் எல்லாம் எங்கேயோ பறந்தோடிவிட்டன என் உயிரனைய உடன்பிறப்புக்களில் ஒன்றான பவளவண்ணன் மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அந்த இதழிலே வந்த செய்தி, என் நெஞ்சிலே செந்தீயாகத் தாக்கிச் சுட்டது. சிரித்த முகமும் சிரம் தாழ்த்தி என் எதிரில் நிற்கும் பணிவும், கழகக் காரியங்கள் ஆற்றுவதில் எறும்பின் சுறுசுறுப்பும், என்னிடத்திலும், கழகத்திடத்திலும் இதயத்தைப் பறி காடுத்த பாசமும் கொண்ட அவரைப் பார்க்கும்போ தெல்லாம், உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள்! நீயாகக் கெடுத்துக் கொள்ளாதே! என்று எத்தனையோ