பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பொங்கல் வாழ்த்து! உடன்பிறப்பே! தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வருகிறது! "இன்பப் பொங்கல் இனிய பொங்கல் எங்கணும் மகிழ்ச்சி எங்கணும் விழாக் கோலம்’ என்றெல்லாம் குதூகலிக்கின்ற அளவுக்கு இந்த ஆண்டு பொங்கல் இல்லை! பொங்கலில். மஞ்சளும் இஞ்சியும் - . - வானுயர் கரும்பும் - தேனிகர் பண்டமும் கொண்டு, வீதிக்கு வீதி ஊருக்கு ஊர், தமிழ்க் குலத்தினர் விழா எடுப்பர் - விருந்து வைப்பர் - விழியாரக் கூத்துக்கள் நடத்துவர்- செவியார இசையமுது பொழிவர்! - இந்த ஆண்டு அங்கிங்கெனாதபடி 'எங்குமே பொங்கல் திருநாள், பூரிப்பு மலிந்திட நடந்தது எனக்கூறிக் களித்திட இயலாதவாறு - தமிழகத்தின் பல பகுதிகள், கொடுங்கரத்தால் சுற்றி வளைக்கப்பட்டு வறட்சியின் விட்டன! பச்சைப் பட்டாடை புனைந்து-நில மகள் நடம் புரிந்த கழனிகள் பல காய்ந்து கிடப்பதைக் காண்கிறோம். 'மழை' யெனும் வைரத் தொங்கல் அணிந்து அடிக்கடி காட்சி தரும் வான மங்கை, கைம்மைக் கோலம் பூண்டு. கண்ணீரையும் மிச்சமின்றி உகுத்து விட்ட வறண்ட கண் களுடன் சோர்ந்திருக்கும் நிலை காண்கிறோம்! வளைந்தோடும் பாம்புக் கூட்டங்கள் போல் நெளிந் தோடும் வாய்க்கால்கள் ---சிற்றாறு -- பெரு நதி அனைத்துமே நம் கண்களுக்குப் பாம்புகளாய்த் தோன்றுகின்றன. க5-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/15&oldid=1695039" இலிருந்து மீள்விக்கப்பட்டது