பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 9 வீண் புரளிகளைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை! விழலுக்கு நீர் இறைக்கப்பட்டால், அதனை உரியவர்களிடம் எடுத்துக் கூறித் தடுக்கும் முரசமாக நீ மாறிட வேண்டும்! கண்ணீர் துடைக்க-உன் கைகள் தாவட்டும்! கஷ்டம் தீர்க்க-உன் கால்கள் பாயட்டும்! உன் கருணை உள்ளம் - எங்கும் வெள்ளமெனப் பெரு கட்டும்! சிறிய அளவில் -- சிக்கனமாக தமிழ் உணர்வின் பசுமை கடாமல் பொங்கல் நாளைக் கொண்டாடிவிட்டு. ஓடு! A துயர்துடைக்கும் பணிகளுக்குத் துள்ளிக் குதித்து காளையை அடக்குவதும், பொங்கல் நாளில் ஒரு வீரமிகு நிகழ்ச்சியன்றோ? வறட்சி உருவில் வரும் முரட்டுக் காளையின் கொம்பை ஒடித்து-வெற்றி காண என் உடன் பிறப்பே - புறப்படு! INCRISTYS சீறிவந்த புலியை முறத்தினால் விரட்டிய தமிழ் மரபின் தங்கமே! இயற்கைக் கொடுமைக்கு எதிராக எழுந்திடு இன்றே! முன்கூட்டி ஏற்றிடு - என் பொங்கல் வாழ்த்தை! அன்புள்ள, B மு.க. 6 1 - 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/19&oldid=1695043" இலிருந்து மீள்விக்கப்பட்டது