பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் . 11 கழக அரசு இந்த இந்த வறட்சியின் பிடியிலிருந்து நாட்டைக் காக்க நீயும் உன் கடமையை விரைந்து செய்ய வேண்டு மென் உன்னால் சென்ற கடிதத்தில் கேட்டிருந்தேன். று, இயன்ற பணிகளை நீ, தொடங்கிவிட்டாய் எங்கே துன்ப துயரங்கள் தென்படுகிறதோ, அங்கெல்லாம் தொண்டாற்று வதற்கு நீ புறப்பட்டு விட்டாய் என்பதையும், மக்களின் முறையீடுகளை அரசுக்குத் தெரிவிப்பதிலும், தெரிவிப்பதிலும், அதிகாரி களிடம் எடுத்துச் சொல்லி ஆவன செய்வதிலும் நீ முன்னணியில் நிற்கிறாய் என்பதையும் கேள்வியுற்று மகிழ் கிறேன் ல . சிலர்தான், நான் எழுதிய கடிதக் குறிப்புக்கள் அவர் களுக்காக எழுதப்பட்டதல்ல என்று எண்ணிக்கொண்டு, பரிந்துரைச் சீட்டுக்களுடன் சென்னை நோக்கிப் படை யெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ப்போது ஒரு தந்திரம் கற்றிருக்கிறார்கள். வந்ததும் ஒரு வணக்கம். பிறகு கட்சியைப் பற்றி ஒரு நிமிடம் கூட்டத்துக்குத் தேதி கேட்டு ஒரு நிமிடம். அதற்கடுத்த நிமிடம், பரிந்துரைச் சீட்டு என்மீது பாயும். நான் அவர்களை வேதனையுடன் பார்க்கிறேன். கோபம் கொப்பளிக்கிறது என் உள்ளத்தில் அடக்கிக் கொள்கிறேன். ஆனாலும் சில நேரங்களில் முடிய வில்லை. என்னையும் மீறி ஏதாவது சொல்லிவிட்டுப் பி பிற பிறகு எனக்கு நானே வருந்துகிறேன். இந்த உணர்ச்சி மாற்றங் கள் லுக்கு நல்லதல்ல; ஆயுளைக் குறைக்கும் என்பர் மருத்துவ நிபுணர்கள். பரவாயில்லை; இந்தச் சங்கடத்தை விட அது எவ்வளவோ மேல்! பயனற்றுப் போயினவோ, அந்தச் சீட்டுகள், இத்தனை ஆண்டுக் காலமாக எப்படிப் அப்படித்தான் இப்போதும் போகுமென்று தெரிந்தும்; ஏன்தான் இப்படி அலைகிறார் களோ; எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களுக்குமிடையில் என் பார்வையி லிருந்து எங்கேயோ நெடுந்தொலைவில் - கட்சிப் பணியாற்று கிற கண்மணியே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/21&oldid=1695047" இலிருந்து மீள்விக்கப்பட்டது