பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களம் சென்றார் காலடிகட்கு! உடன்பிறப்பே, ஜனவரி-25-மொழி புரட்சிநாள்! மூண்டெழுந்த இந்தி எதிர்ப்புத் தீயை அணைக்க முடியாமல், தமிழகத்தையே அன்றைய ஆளவந்தார் பிணக்காடாக ஆக்கத் துடித்த நாள்! CONFRO மக்களின் மாணவர்களை அடக்குவதிலும் - தழிழ் உணர்வுகளைப் பொசுக்குவதிலும் அடக்குமுறையைக் கோர நர்த்தனமாடச் செய்வதிலும் - துப்பாக்கிக் குண்டு களை மழையாகக் பொழியச்செய்து, குருதி ஆற்றில் தமிழ் வாலிபர்களின் தேக்குமரத் தேகங்களை தெப்பம்போல் மிதக்கச் செய்வதிலும் பக்தவத்சலனார். 'எதற்கும் அசையாத மலைப்பாறைபோல இருந்தார்' என்ற பாராட்டை, மத்திய அரசிடமிருந்து பெற்ற நேரமும் அந்த நேரம்தான்! "கொம்புத் தேனாம் தமிழ் மொழி எமக்கிருக்க... கொட்டும் தேளாம் இந்தி மொழிக்கு எதற்காக ஆதிக்கம்? எனக் கேட்டுத் தங்கள் பொன்னவிர் மேனியைத் தீக்குளத்தில் குளிப்பாட்டி உயிர்நீத்த தியாகச் செம்மல்கள் உலகிற்கு தமிழர்களின் மொழிப்பற்றை முரசொலித்துக் காட்டிய வரலாற்றுப் புகழ்மிக்க நேர' மன்றோ அந்த நேரம்! தில்லையில் மாணவச் சீயம் இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதும், மாணவமணி மாயூரம் சாரங்கபாணி தன்னை நெருப்பில் சுட்டுக் கொண்டதும் அந்த மொழிப் புரட்சியின்போது தானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/23&oldid=1695049" இலிருந்து மீள்விக்கப்பட்டது