பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கலைஞர் தீக்குளித்து மாண்ட தீரர்களின் கல்லறைகள் இருக்கும் திக்குநோக்கி வணங்குகிறோமே- அந்தத் தியாகிகளைக் களங்கப்படுத்தி அன்றைய ஆளவந்தார் பேசியதை நாடு மறந்திடுமோ? இந்தி ஆதிக்கம் பரவிட எடுக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்து அறிஞர் அண்ணா போர்க்குரல் கொடுத்தார்; ஏன் தமிழகமே போர்க்கோலம் பூண்ட 1 -து! நமது வெறுப்பைக் காட்டிட, 'அவரவர்கள் இல்லத்தில் கருப்புக் கொடி பறக்கட்டும்' எனக் கழகம் அறிவித்தது! 'தங்கள் சொந்த வீடுகளில் கருப்புக் கொடி பறக்க. விடப்பட்டால் போதுமானது-பொது இடங்களில் தேவை யில்லை' என் āறு அறிஞர் அண்ணா திட்டவட்டமாகத் தெரிவித்தார்! 99 அண்ணனின் ஆணைக்கேற்ப, உண்மைத் தமிழர்களின் ல்லங்களில் எல்லாம் உயர்ந்தது-கருப்புக்கொடி! 'உடல் மண்ணுக்கு - உயிர் தமிழுக்கு' - என்று உறுதி முழக்கம் செய்த உத்தமத் தமிழர்கள் தங்கள் வீட்டு முகப் புகளில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து ஏற்றினர்-கருப்புக் கொடி! ந்த வெறியின்மீது தங்களுக்குள்ள வெறுப்பைக் காட்டிக்கொள்ள - தங்கள் தங்கள் சொந்த வீடுகளில் கருப்புக் கொடி கட்டிக் கொண்டதை, தமிழ் உணர்வு அற்ற கயவர் கள் -- கொடியவர்கள்-இனத்துரோகிகள் எதிர்த்தனர்! கருப்புக் கொடி பறந்த இல்லங்களில் களம் அமைத் தனர் - அதனை. அந்நாள் காவல் துறையினர் வேடிக்கை - பார்த்தனர்! - அண்ணா வீட்டில் ஏற்றியிருந்த கருப்புக் கொடியை- கழகத் தலைவர்களின் இல்லங்கள். கழக அலுவலகங்கள் ஆகியவற்றில் ஏற்றியிருந்த கருப்புக் கொடிகளை- காவல் துறையின் துணையோடு - கயவர்கள் வீழ்த்தினர்! อ சில இடங்களில், மோதல் - கலவரம் - அமளி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/24&oldid=1695050" இலிருந்து மீள்விக்கப்பட்டது