பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் கழகக் கண்மணிகள் செய்யப்பட்டனர்! 15 ஆயிரம் ஆயிரமாகக் கைது - அரசியல் சட்டத்துக்குத் தீயிட்டு - தமிழகத்தின் இந்தி எதிர்ப்புக் குரலை எட்டுத்திக்கும் எதிரொலித்த அடலேறு கள், சிறைக்கோட்டத்தில் அடைபட்டுக் கிடந்தனர்! பா துகாப்புச் சட்டங்கள்-பாளையங்கோட்டைகள் கழகத்தின் பயங்கரப் பாய்ச்சல் அப்போதுதான்! மீது PAZZO நடத்தியதும் குமுறும் எரிமலையாக--கொழுந்துவிட்டு எரியும் அனற் காடாகத் தமிழகம் காட்சியளித்தது - குளிர் பொழியும் 'கோவா' கடற்கரையாக அல்ல! "செந்தமிழ்க்குத் தீமை வந்த பின்னும்- இந்தத் தேகம் இருந்தொரு லாபம் உண்டோ? என்ற எழுச்சிமிகு கேள்வி எங்கணும் கேட்டது! துப்பாக்கி ரவைகளை மலர்களாக ஏற்றுக் கொண்டு, மானங்காக்கும் சீமையினர், மரண மஞ்சத்தில் துயில் கொண்டனர்! - க தீப்பிழம்புக்கும் - தென்றலுக்கும் வேறுபாடு தெரி யாமல் கனலில் களிநடனம் ஆடி- 'தமிழ் வாழ்க என இசை பாடி சாவு மங்கையைத் தழுவினர் மறவர் குலச் சிங்கங்கள்! "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை-எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை' -என்ற புரட்சிக் கீதம், தமிழர்களின் உதட்டில் - உள்ளத் தில் இடம் பிடித்துக் கொண்டது! ஆகா! அந்தத் தமிழ் உணர்வை-எண்ணிக் கொண் டாலே, இனிக்கிறது நெஞ்சம்! அந்த களத்தில் உயிர் நீத்தவர்க்கு நமது வீர வணக்கம்! 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/25&oldid=1695051" இலிருந்து மீள்விக்கப்பட்டது