பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 குலக்கொழுந்தே குணாளா BANGLADE மொழி குவித்தார்! கலைஞர் என்றுதான் பாராட்டு பெரியாரின் சுடுசொற்களில் அவர் சுவைகண்டு மகிழ்ந் தாரே தவிர, சூறாவளியாக மாறிவிடவில்லை! தீக்குண்டத்தில் தள்ளியவர்களுக்கும் தென்றலாக மாறிச் சுகமளிப்பதுதான் நம் அண்ணனின் இயல்பு! கழகத்திற்குள்ளேயே துரோகம்! 'அண்ணனின் விரல் பிடித்து வளர்ந்தேன்' என்று மேடைக்கு மேடை முழங்கி - இறுதியில் அவரையே எதிர்த்து --மேடைக்கு மேடை, திருவாளர் அண்ணாதுரை' என்று அழைக்க முற்பட்டு- கட்சியைக் காட்டிக் கொடுக்கத் துணிந்த எட்டப்பர்கள் அப்போதே புறப்பட்டனர்! அவர்களின் கட்சிக் கட்டுப்பாடற்ற போக்கை, அண்ணா எவ்வளவோ பொறுத்துக் கொண்டார்; ஏன்- பொறுமை யின் எல்லைக் கோட்டிலேயே நின்றார்! ம பொறுமைக்கும் அளவு உண்டு அல்லவா? 'கட்சிக்கே ஆபத்துவரக் காத்திருக்கிறது' என உணர்ந்ததும், அண்ணா துரோகிகளைத் தூக்கி எறிந்தார்! ஓடிப்போனவர்கள் அந்த உ உத்தமனைத் தாக்கியது, அப்பப்பா - அளவிட முடியுமா? - கேட்போர் காதுகளைப் பொத்திக் கொண்டு கண்ணீர் பொழிகின்ற அளவுக்கு அவர்களின் நாவிலிருந்து புறப் பட்டன - நாராச மொழிகள்! அண்ணன், அவைகளைத் தனது புன்னகையால் பாசுக்கித் தள்ளினாரே யொழிய, பொங்கும் எரிமலையாக மாறவில்லை! அமைதி- அடக்கம் - பொறுமை- இவைகள், அவரது இயல்புகள்; ஆனால், தமிழர்தம் மொழிக்கு - உரிமைக்கு இன்னல் வருகிறதென்றால் - அந்த இன்னலைத் துடைக்கும் ஆற்றல் பெற்ற இயக்கத்திற்குச் சோதனை வருகிறதென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/28&oldid=1695054" இலிருந்து மீள்விக்கப்பட்டது