பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் றால் - அப்போது நமது அண்ணன், தெழுவார்! 19 அலைகடலென ஆர்த் . கடலை நான் உவமை காட்டுவதற்குக் காரணம் 'ஆர்த் தெழும்போதும், அலைகடல் போன்ற பரந்த உள்ளத்தோடு தான் பிரச்சினைகளை அவர் சந்திப்பார்' என்பதற்காகத் தான்! அவரால் நன்மை பெற்றவர்கள், அடுத்த நாலாவது நாளே நன்றி மறந்து - அவரை எதிர்த்ததுண்டு! - - அவர் அளித்த உணவை அருந்திவிட்டு - அந்தக் கை ஈரம் காய்வதற்குள்ளேயே அவர் கழுத்தை நெறிக்க முயன்றதுண்டு! அவரால் உயரத்தில் அங்கிருந்தவாறே உண்டு! தூக்கி வைக்கப்பட்டவர்கள், காலால் அவரை உதைத்ததும் காரணத்தால்தான், அதையும் தாங்கிக் கொண்ட அவர் அறிஞரானார்! இரண்டாண்டுக் காலம் பல மாதங்கள் நோயுடன் எதிரிகளின் தாக்குதல்; அவர் துணி அரசுத் தலைமை; அதிலும் போராட்டம்; அப்போதும் சிலையைச் சுற்றிக் கறுப்புத் ஊர்வலம்; சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்; உலகத் தமிழ் மாநாட்டுக் கணக்கு; ஊழல் புகார்; இப்படி, ஆதாரமற்ற - அருவருக்கத்தக்க - ஆபாச மான நடவடிக்கைகள்! கொடிய நோயின் வேதனையைத் தாங்கிக் கொண்ட அந்தப் பெரிய உள்ளம், இந்த வேதனையையும் தாங்கிக் கொண்டு அவையில் விடை அளித்த காட்சியை யார்தான் மறந்துவிட முடியும்! அந்த அன்புத் தங்கம், அதோ உறங்கிக் கொண்டிருக் கிறது! நமது நெஞ்சத்து வைரம் நீடுதுயில் கொண்டிருக் கிறது! வா-அங்கு போவோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/29&oldid=1695055" இலிருந்து மீள்விக்கப்பட்டது